fbpx

சினிமாவில் இருந்து காணாமல்போன விஜய்யின் ரீல் தங்கை..!! இப்பொழுது என்ன செய்கிறார்..?

தமிழில் ஆட்டோகிராப், திருப்பாச்சி போன்ற படங்களின் மூலமாக பிரபலமானவர் தான் நடிகை மல்லிகா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிகளிலும் நடித்து பல விருதுகளையும் பெற்றுள்ளார். ஆனால், இவரின் உண்மையான பெயர் ரீஜா ஜோன்சன். இவர், கேரளாவை சேர்ந்தவர். இவரின் முதல் திரைப்படமும் கேரளத் திரைப்படம் தான். அதன் மூலமாகத் தான் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் 2002-ஆம் ஆண்டு ‘நிலுக்குது’ என்ற மலையாளத் திரைப்படம் மூலமாக ஒரு ஹீரோயினாக அறிமுகமானார்.

இதன் பின்னர் தான் தமிழில் ‘ஆட்டோகிராப்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அத்தோடு ‘மகாநடிகன்’ திரைப்படத்திலும் சிறிய கரெக்டரில் நடித்திருப்பார். இதனைத் தொடர்ந்து மேலும் ஒரு சில படங்களில் நடித்து வந்த இவருக்கு மிகவும் திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் 2005-ஆம் ஆண்டு வெளியான ‘திருப்பாச்சி’ திரைப்படம். இதில் விஜய்க்கு தங்கையாக நடித்து அசத்தியிருந்தார். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவருக்கு பல படங்களிலும் தங்கச்சியாகவோ அல்லது துணை நடிகையாகவோ நடிப்பதற்கான வாய்ப்புகள் குவிந்தன. அந்தவகையில் ‘குண்டக்க மண்டக்க, திருப்பதி, உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங்’ போன்ற பல படங்களைக் குறிப்பிட முடியும்.

இருப்பினும் இவர் அதிகளவில் மலையாளப் படங்களில் தான் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாது ‘அஞ்சலி, திருவிளையாடல்’ என்ற சீரியலிலும் நடித்திருக்கின்றார். இந்நிலையில், தற்போது நடிகை மல்லிகா அவர்கள் திருமணமாகி வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார். இதனால் சினிமாத்துறையை விட்டு காணாமலே போய் விட்டார். இருப்பினும் தனது குடும்ப வாழ்க்கையை சந்தோசமாக முன்னெடுத்து வருகிறார்.

Read More : வாகன ஓட்டிகளுக்கு செம குட் நியூஸ் வெளியாகப் போகுது..!! பெட்ரோல், டீசல் விலை குறையுதாம்..!! எவ்வளவு தெரியுமா..?

English Summary

Actress Mallika is famous for Tamil films like Autograph and Tirupachi.

Chella

Next Post

சேஸிங் செய்து பிடிக்கப்பட்ட கண்டெய்னர் லாரி..!! துப்பாக்கியுடன் கொள்ளை கும்பல்..!! என்கவுண்டர் செய்த போலீஸ்..!!

Fri Sep 27 , 2024
In Namakkal district, a container lorry was chased away by the police, and a man from North State was shot dead in an encounter.

You May Like