பிரான்ஸிடம் இருந்து மேலும் 26 ரஃபேல் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரும் 14-ம் தேதி பிரான்ஸ் தேசிய தினம் எனப்படும் பாஸ்டில் தினத்தையொட்டி, சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரான்ஸ் செல்ல உள்ளார். பிரான்சிடம் இருந்து 26 ரஃபேல் எம் நேவல் ஜெட் மற்றும் மூன்று கூடுதல் ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குவதற்கான ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்திட வாய்ப்புள்ளது. இந்த ஒப்பந்தங்கள் பிரதமர் நரேந்திர மோடியின் பிரான்ஸ் பயணத்தின் போது அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுமார் 90,000 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஒப்பந்தங்களில் 26 ரஃபேல் எம் விமானங்கள், 22 ஒற்றை இருக்கை மற்றும் நான்கு இரட்டை இருக்கைகள் கொண்ட பயிற்சி பதிப்புகள் அடங்கும். அதே போல மூன்று கூடுதல் நீர்மூழ்கிக் கப்பல்களும் இந்த பயணத்தின் பொழுது வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.