டிக்டாக் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ஜி.பி.முத்து. இவர் உச்சரிக்கும் செத்த பயலே.. நாரப்பயலே என்ற வார்த்தை மூலம் தமிழ்நாடு மக்கள் இவரை மிகவும் விரும்பி ரசித்தனர். இவர், தனக்கென்று சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றைத் தொடங்கி பல்வேறு வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இவ்வாறாக டிக்டாக் மூலம் பிரபலமான ஜி.பி.முத்துவுக்கு, பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகளும் தொடர்ந்து குவிந்து வருகிறது. அந்தவகையில் வெற்றி, ஷிவானி நாராயணன் நடிப்பில் கடந்த வாரம் ‘பம்பர்’ படம் வெளியாகி இருந்தது. இதில், ஜிபி முத்துவும் நடித்திருந்தார்.
இப்படமானது கலவையான விமர்சனங்களை பெற்று வந்த நிலையில், ப்ளூ சட்டை மாறனும் இப்படத்தைப் புகழ்ந்திருந்தார். ஆனால், கடைசியில் பன்னி ஒன்றை உள்ளே விட்டு படத்தைக் கெடுத்துட்டாங்க, அந்த பன்னி யாரென கண்டுபிடித்து அங்கேயே அடித்துக் கொன்றிருந்தால் படம் நல்லா இருந்திருக்கும் எனவும் கூறியிருந்தார் ப்ளூ சட்டை மாறன். இந்நிலையில், தன்னை பன்னி என ப்ளூ சட்டை மாறன் பேசியதாக ஜிபி முத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ள வீடியோ ஆனது தற்போது பரபரப்பை கிளப்பி உள்ளது.
இதுகுறித்து ஜிபி முத்து அதில் பேசுகையில் “ப்ளூ சட்டை மாறன் பம்பர் படத்திற்கு நல்லாத்தான் விமர்சனம் செய்திருந்தார். ஆனால், இடையே ஒரு பன்னி வருதுன்னு சொல்றாரு, அவரு என்ன தான் பன்னின்னு சொல்றாரு, ஏய் நான் பன்னியா? பன்னி கடிச்சா என்ன ஆகும் தெரியுமா? தேவையில்லாமல் என்னை சீண்டிட்ட.. உன்னை சும்மா விடமாட்டேன்” எனக் கூறி ப்ளூ சட்டை மாறனைத் தாறுமாறாக விளாசி உள்ளார்.