fbpx

அடித்தது ஜாக்பாட்..!! விவசாய நிலத்தில் வைரம்..!! ரூ.12 லட்சத்திற்கு விற்ற பெண் விவசாயி..!! எங்கு தெரியுமா..?

பெண் ஒருவருக்கு அவருடைய விவசாய நிலத்தில் சுமார் 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைரம் கிடைத்தது தெரியவந்துள்ளது.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் மழைக்காலத்தின் போது விவசாய நிலையங்களில் வைரம் கிடைப்பது வழக்கம். இதனால் மழை பெய்ய துவங்கியவுடன் கிராம மக்கள் விளைநிலங்களில் வைர வேட்டையில் ஈடுபடுவர். வட மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகளும் மழைக்காலத்தில் கர்னூல் மாவட்டத்திற்கு வந்து பொதுமக்களுக்கு கிடைக்கும் வைரத்தை ரகசியமாக வாங்கி செல்வது வழக்கம்.

இந்நிலையில், கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஜே எறகுடி கிராமத்தைச் சேர்ந்த பெண்
ஒருவருக்கு அவருடைய விவசாய நிலத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வைரம்
ஒன்று கிடைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த வைரத்தை வியாபாரிகள் தங்களுக்குள் கூட்டணி அமைத்து மிகவும் குறைந்த விலைக்கு 12 லட்சம் ரூபாய்க்கு வாங்கி சென்று விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பழங்காலம் முதலே ஆந்திராவின் ராயல் சீமா பகுதியில் இது போல் விளைநிலங்களில் வைரம் உள்ளிட்ட நவரத்தினங்கள் கிடைப்பதால் இந்த பகுதிக்கு ராயலசீமா ரத்தனால சீமா என்ற பெயரும் உள்ளது.

Chella

Next Post

’ஸ்டார் 2.0’ திட்டம்..!! இனி கட்டணமே வேண்டாம்..!! பத்திரப் பதிவுத்துறை அதிரடி அறிவிப்பு..!!

Thu Jul 27 , 2023
1975 முதல் தற்போது வரையிலான காலத்திற்குரிய பதிவேடு ஏற்கனவே கணினிமயமாக்கப்பட்டுள்ள நிலையில், 1950 – 1974 வரையிலான பதிவேடுகளை கணினியில் மேலேற்றம் செய்வதற்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பத்திரப்பதிவு துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்துக்குள் வருமான வரி இணையதளத்தில் உரிய விவரங்களைப் பதிவேற்றம் செய்யாத சார் பதிவாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிவுத்துறை தலைவர் தெரிவித்திருந்தார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு, இது தொடர்பாக பதிவுத்துறை […]

You May Like