fbpx

ரீல்ஸ் மோகத்தில் மூழ்கிய தம்பதி!… குழந்தையை விற்று IPHONE வாங்கிய கொடூரம்!

மேற்கு வங்கத்தை சேர்ந்த தம்பதி, தங்களது குழந்தையை விற்று IPHONE வாங்கி ரீல்ஸ் வீடியோக்களை எடுத்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மேற்கு வங்காளத்தில் உள்ள பர்கானா மாவட்டத்தை சேர்ந்து தம்பதி ஜெயதேவ் – சதி. இந்த தம்பதி மிகவும் பொருளாதார நெருக்கடியில் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் திடீரென இவர்கள் புதிய iphone ஒன்று வாங்கியுள்ளனர். இதனை அக்கம் பக்கத்தினர் கவனித்து விட்டு சந்தேகம் அடைந்து காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதையடுத்து அவர்களிடம் விசாரணை மேற்கண்ட போது அவர்கள் தங்களது குழந்தையை விற்பனை செய்து அந்த பணத்தின் மூலம் iphone வாங்கியதையும் மேற்கு வங்கத்தின் பல பகுதிகளுக்கு சென்று ரீல்ஸ் வீடியோக்கள் பதிவு செய்ததையும் ஒப்புக் கொண்டுள்ளனர். இதனைதொடர்ந்து காவல்துறையினர் தாய் சதி மற்றும் குழந்தையை பணம் கொடுத்து வாங்கிய பெண் பிரியங்கா ஆகிய இருவரை கைது செய்ததோடு தலைமறைவாக உள்ள குழந்தையின் தந்தை ஜெயதேவை தேடி வருகின்றனர்.

Kokila

Next Post

இளைஞர்களுக்கு அசத்தல் அறிவிப்பு...! குரூப் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு...! உடனே விண்ணப்பிக்கவும்...!

Fri Jul 28 , 2023
காஞ்சிபுரம்‌ மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்தில்‌ செயல்பட்டு வரும்‌ தன்னார்வ பயிலும்‌ வட்டம்‌ வழியாக பல்வேறு மத்திய மற்றும்‌ மாநில அரசு போட்டித்‌ தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்‌ நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு பணியாளர்‌ தேர்வாணையத்தால்‌ விரைவில்‌ அறிவிக்கப்படவுள்ள தொகுதி-1 மற்றும்‌ தொகுதி-2 முதல்‌ நிலை தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த நேரடி இலவச பயிற்சி வகுப்புகள்‌ காஞ்சிபுரம்‌ மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில்‌ 17.07.2023 […]

You May Like