நாடு முழுவதும் 782 ரயில் நிலையங்களில் 850 ‘ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு’ விற்பனை நிலையங்கள் செயல்படுகின்றன.
இந்திய ரயில்வேயில் 782 ரயில் நிலையங்களில் “850 ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு’ விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.மத்திய அரசின் உள்ளூர் தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலும், தொலைநோக்கு பார்வையை ஊக்குவிக்கும் வகையில், உள்ளூர் அல்லது உள்நாட்டு தயாரிப்புகளுக்கு சந்தையை வழங்குதல் மற்றும் சமூகத்தின் விளிம்புநிலை பிரிவினருக்கு கூடுதல் வருமான வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகிய நோக்கங்களுடன் ‘ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு’ (ஓஎஸ்ஓபி) திட்டம் இந்திய ரயில்வேயால் தொடங்கப்பட்டது. இந்த ஓ.எஸ்.ஓ.பி விற்பனை நிலையங்களின் நாடாளுமன்ற தொகுதி வாரியான தரவு இந்திய ரயில்வேயால் பராமரிக்கப்படவில்லை