fbpx

12 கல்யாணமா..? தங்கை ஸ்ரீதேவி இப்படிப்பட்டவரா..? ரகசியத்தை உடைத்த வனிதா விஜயகுமார்..!!

தமிழ் சினிமா நட்சத்திரங்களில் ஒருவராக பல காலமாக திகழ்ந்து வருகின்ற ஒருவரே நடிகர் விஜயகுமார். இவர் அதிகளவில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். இன்று வரை சினிமாத் துறையிலேயே தனது கவனத்தை செலுத்தி வருகிறார். இவ்வாறாக மூத்த நடிகராக இருக்கின்ற விஜயகுமாருக்கு முத்துக்கண்ணு மற்றும் மஞ்சுளா என இரு மனைவிகள். அதில் மூத்த மனைவி முத்துக்கண்ணுவுக்கு அனிதா, கவிதா, அருண் என 3 பிள்ளைகளும், இரண்டாவது மனைவி மஞ்சுளாவுக்கு வனிதா, பிரீத்தா, ஸ்ரீதேவி என 3 மகள்களும் என விஜயகுமாருக்கு மொத்தமாக 5 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

இந்த 5 மகள்களிலும் வனிதாவுடன் ஏற்பட்ட சச்சரவுகள் காரணமாக குடும்பத்தினர் யாருமே அவருடன் பேசுவதில்லை. மீதமுள்ள 4 மகள்களும் எத்தனை அன்பாக இருக்கிறோம் என்பதை தெரிவிக்கும் பொருட்டு அடிக்கடி தங்களின் குடும்ப புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய வனிதா, பல விஷயங்களை பகிர்ந்திருக்கின்றார்.

அந்தவகையில் அவர் கூறுகையில், “என் இரு மகள்கள் மற்றும் மகன் ஸ்ரீஹரி கட்டாயமாக சினிமாவுக்கு தான் வருவார்கள். அவர்கள் காதலித்தாலும் நான் காதலை பிரித்துவிடுவேன் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், நான் அப்படி எல்லாம் செய்ய மாட்டேன். நான் இதுவரை 12 பேருக்கு கல்யாணம் செய்து வைத்துள்ளேன். அத்தோடு காதலர் தினத்தற்கு ஐ லவ் யூ என எழுதியிருந்த க்ரீடிங் கார்ட் அம்மாவுக்கு கொடுத்துள்ளேன். ஆனால், அது அம்மாவுக்காக வாங்கவில்லை. தான் காதலித்த ஒருவருக்காக வாங்கினேன். அதனை அம்மா பார்த்துவிட்டதால், அவரிடம் மாட்டிக் கொள்ளாமல் இருக்க அம்மாவுக்காக வாங்கியது என்று சொல்லி கொடுத்துவிட்டேன்” என்றார்.

மேலும், தன்னுடைய தங்கைகள் பற்றிக் கூறுகையில், ”தன்னுடைய அம்மா தன்னையும், தன் தங்கை ப்ரீத்தாவையும் மட்டுமே அடித்து வளர்த்தார் எனவும், இரண்டாவது தங்கை ஸ்ரீதேவியை எப்பவும் அவர்கள் அடித்தது இல்லை எனவும் கூறியுள்ளார். சின்ன வயதில் ஸ்ரீதேவி மிகவும் கோபப்படுவார். கோபம் வந்தால் ரூமுக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டு கையில் கிடைப்பதை எல்லாம் போட்டு உடைப்பாள். இதே மாதிரிதான் சிறு வயதில் இருந்தே ஸ்ரீதேவி சரியான பிராடு, நல்ல டிராமா போட்டு எல்லாரையும் பயங்கரமாக ஏமாற்றுவார். அதனாலேயே அவளை யாருமே அடிக்க மாட்டார்கள்” என்று ஸ்ரீதேவி பற்றிய நீண்டநாள் ரகசியத்தை அந்தப் பேட்டியில் போட்டுடைத்துள்ளார் வனிதா.

Chella

Next Post

டேபிள் டென்னிஸ் சீசன் 4 இறுதிப் போட்டியில் கால்பதித்தது கோவா அணி..!

Sat Jul 29 , 2023
டேபிள் டென்னிஸ் சீசன் 4-ல் டெல்லி தபாங் அணிக்கு எதிரான அரைஇறுதி ஆட்டத்தில் 8-7 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது கோவா சாலஞ்சர்ஸ் அணி. இந்தியன் ஆயில் அல்டிமேட் டேபிள்டென்னிஸ் சீசன் 4 போட்டிகள் புனேவில் உள்ள ஷிவ்சத்ரபதி விளையாட்டு வளாகத்தில் நடைபெற்று வருகிறது. 6 அணிகள் கலந்துகொண்டுள்ள இந்த தொடர் தற்போது நாக் அவுட் சுற்றை எட்டி உள்ளது. நேற்று நடைபெற்ற முதல் அரை […]

You May Like