மத்திய பிரதேசம் மாநிலத்தில் சிறுமியை பாலியல் உணர்வு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட 2️ பேரின் வீடுகளை இடித்து அரசன் நிர்வாகம் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அந்த பகுதியில் உள்ள மைகார் மாவட்டத்தில் ரவீந்திர குமார் மற்றும் அதுல் படோலியா 12 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. சென்ற வியாழன் நடைபெற்ற இந்த சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட சிறுமி அலறி துடித்திருக்கிறார்.
குற்றம் சுமத்தப்பட்ட இருவரும் மைகாரில் இருக்கின்ற பிரபல ஆலயத்தின் நிர்வாக கமிட்டியில் இடம் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் 12 வயது சிறுமியை ஆசை வார்த்தை ஒரு ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்று அந்த சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் ஏற்பட்ட காயத்தை பார்த்து சிறுமியின் பெற்றோர் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதனைத் தொடர்ந்து ரவீந்திர குமார் மற்றும் அதுல் படோலியாவின் வீடுகளை மத்திய பிரதேச அரசு நிர்வாகம் இடித்து தள்ளி நடவடிக்கை மேற்கொண்டு இருக்கிறது இந்த 2 வீடுகளும் சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள். ஒருவர் அரசு புறம்போக்கு நிலத்திலும், மற்றொருவர் எந்த அனுமதியும் வாங்காமலும் வீடு கட்டி இருப்பதாக சொல்லப்படுகிறது.
வீட்டை இடிப்பதற்கு முன்னதாக நகராட்சி ஆணையர் சம்பந்தப்பட்ட இரண்டு குடும்பத்தினருக்கும் வீட்டை இடிப்பது குறித்து சம்மனை நேற்று முன்தினம் அனுப்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தான் நேற்று காலை வீடுகள் இடிக்கப்பட்டனர். குற்றம் சுமத்தப்பட்ட இருவர் மீதும் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ததுடன், நீதிமன்ற காவலில் வைத்திருக்கிறார்கள்.