fbpx

போலீசாரை இடிக்க வந்த கருப்பு நிற கார்!! அதிகாலையில் பதறவைக்கும் என்கவுண்டர் சம்பவம்…!

தாம்பரம் அடுத்த ஊரப்பாக்கத்தில் போலீசார் நடத்திய என்கவுண்டரில் 2 ரவுடிகள் சுட்டுக்கொலை. வாகன தணிக்கையின் போது, வாகனத்தை நிறுத்தாமல், காவல்துறை வாகனத்தின் மீது மோதி நிறுத்தியதாகவும், மேலும் உதவி ஆய்வாளரை அரிவாளால் வெட்டியதால் என்கவுண்டர் எனத் தகவல் . கொல்லப்பட்ட இருவரும் ஓட்டேரியை பகுதியைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் குறித்து காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் “தாம்பரம் மாநகர காவல் கூடுவாஞ்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காரணை புதுச்சேரி அருங்கல் சாலையில் இன்று 01-08-2023 ஆம் தேதி அதிகாலை 03.30 மணியளவில் காவல் ஆய்வாளர் திரு.முருகேசன் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு.சிவகுருநாதன் மற்றும் காவலர்கள் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்த போது அதி வேகமாக வந்த கருப்பு நிற SKODA காரை நிறுத்த முற்பட்ட போது நிறுத்தாமல் உதவி ஆய்வாளரை இடிப்பது போல் வந்து போலிஸ் ஜீப் மீது மோதி நின்றது, கார் அருகில் சென்ற போது அதில் இருந்து நான்கு நபர்கள் ஆயுதங்களுடன் காரை விட்டு இறங்கி போலிசாரை நோக்கி தாக்க முற்பட்டனர்.

அதில் ஒருவர் அருவாளால் உதவி ஆய்வாளரின் இடது கையில் வெட்டி மீண்டும் தலையில் வெட்ட முற்பட்ட போது உதவி ஆய்வாளர் கீழே குனிந்ததால் அவரது தொப்பியில் வெட்டுபட்டது. இதை பார்த்த காவல் ஆய்வாளர் ஒரு நபரையும் உதவி ஆய்வாளர் ஒரு நபரையும் சுட்டனர். மீதி இருவர் அங்கிருந்த ஆயுதங்களுடன் தப்பி ஓடினார்கள்.

காயம்பட்ட இருவரை பற்றி விசாரித்தபோது, அதில் ஒருவர் பெயர் வினோத் (எ) சோட்டா வினோத், வயது 35, த/பெ. சுப்பிரமணி என்றும் அவர் ஓட்டேரி காவல் நிலைய சரித்திர பதிவேடு (A+ Category, HS.No.04/15) குற்றவாளி எனவும், அவர் மீது 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் அதில் 10 கொலை, 15 கொலை முயற்சி, 10 கூட்டுக்கொள்ளை, 15 அடிதடி மற்றும் மிரட்டி பணம் பறித்தல் வழக்குகள் இருப்பதும் மற்றொரு நபர் பெயர் ரமேஸ், வயது 32, த/பெ. சுந்தரம் என்றும் அவர் ஓட்டேரி காவல் நிலைய சரித்திர பதிவேடு (A Category, HS.No.18/20) குற்றவாளி எனவும் அவர் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் அதில் 5 கொலை, 7 கொலை முயற்சி, 8 அடிதடி மற்றும் மிரட்டி பணம் பறித்தல் வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

மேலும் காயம்பட்ட உதவி ஆய்வாளர் திரு. சிவகுருநாதன் என்பவர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டார். காயம்பட்ட எதிரிகளை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த போது எதிரிகள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்” என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kathir

Next Post

இந்திய கடலோர காவல் படையில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு……! உடனே விண்ணப்பியுங்கள்……..!

Tue Aug 1 , 2023
இந்திய கடலோர காவல் படை என்பது கடல் வழியே இந்திய நாட்டிற்குள் ஊடுருவும் சட்டவிரோதமான தீவிரவாத கும்பல் மற்றும் போதை பொருள் கடத்தல் போன்ற பல்வேறு விவகாரங்களை தடுப்பதற்காக மத்திய அரசால் உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனம். அந்த நிறுவனத்தில் அவ்வப்போது காலி பணியிடங்கள் ஏற்பட்டால் அதற்கான அறிவிப்புகளை இந்திய கடலோர காவல் படை வெளியிடும் அப்படி வெளியிடும்போது அதனை பார்த்து, அதற்கு தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பம் செய்து பயன்பெறலாம். […]

You May Like