நடிகர் தனுஷும், ஐஸ்வர்யாவும் விவாகரத்து செய்துகொண்டதாக தகவல்கள் வெளியானது. இதனை அவர்களே சோஷியல் மீடியாவில் உறுதி செய்திருந்தனர். பிறகு சில நாட்களில் அந்த அறிக்கையை அவர்கள் டெலீட் செய்துவிட்டனர். இதுகுறித்து முழுமையாக எந்த தகவலும் தெரியாமல் இருந்த நிலையில், ஐஸ்வர்யா வேறு ஒருவரை காதலித்து வருவதாகவும், விரைவில் அவர்கள் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் தகவல்கள் வெளியானது.
ஆனால், அந்த திருமணம் நடக்காது, ரஜினிகாந்த் ஐஸ்வர்யாவை கடுமையாக திட்டிவிட்டார் என்று பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும் தனுஷும், ஐஸ்வர்யாவும், விவாகரத்து செய்துக்கொள்ள மாட்டார்கள். தனுஷுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் இடையே இருக்கும் பிரச்சனை தற்காலிகமானது தான். அவர்கள் இப்போது தனித்தனியாக வாழ்ந்து வந்தாலும், விரைவில் ஒன்றாக சேர்ந்து வாழ்வார்கள். விவாகரத்து செய்துகொள்ள மாட்டார்கள். ரஜினிகாந்தும் இதற்கு நிச்சயம் அனுமதிக்கமாட்டார்.
சமீபத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஒரு இளம் உதவி இயக்குநரை விரும்பினார். அந்த நபரை ஐஸ்வர்யா வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் ரஜினிகாந்த் ஐஸ்வர்யாவிடம் இந்த வயதில் இதெல்லாம் உனக்கு தேவையா? என்று மிக கடுமையாக திட்டிவிட்டார். இனி இப்படி செய்யக்கூடாது என்று உறுதியாக கூறிவிட்டார் ரஜினிகாந்த். ரஜினிகாந்த்துக்கு தனுஷ் மீது நல்ல அபிப்ராயம் இருக்கிறது. எனவே, அவர் இவர்கள் விவாகரத்து செய்ய ஒத்துக்கொள்ளமாட்டார். கூடிய சீக்கிரமே, ஓரிரு மாதத்தில் கூட தனுஷும், ஐஸ்வர்யாவும் மீண்டும் இணைந்துவிட்டனர் என்ற செய்தி வரும் என்று பயில்வான் தெரிவித்துள்ளார்.