ஸ்மார்ட் ஃபோனுக்கு ஒட்டியுள்ள டெம்பர் கிளாஸில் இத்தனை தீமைகளா?. இத முதலில் தெரிஞ்சுக்கோங்க!

phone tempered glass 11zon

ஸ்மார்ட்போன்கள் என்பது தற்போது அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. செல்போன் அழைப்புகளுக்கு மடும் இன்றி வங்கி பரிவர்த்தனைகள், ஷாப்பிங், பொழுது போக்கு விஷயங்கள் என அனைத்தையும் உள்ளங்கைக்குள் ஸ்மார்ட்போன்கள் கொண்டு வந்துவிட்டன. செல்போன் புதிதாக வாங்கியவர்கள் உடனடியாக ஸ்கீரின் கார்டு அல்லது டெம்பர் கிளாஸ் பயன்படுத்துவதை பார்க்க முடியும்.


ஸ்மார்ட் போன்கள் கீழே விழுந்தால் டிஸ்பிளே பாதிக்கப்படாமல் இருக்கவும், டிஸ்பிளேவில் கீறல் போன்றவை ஏற்படாமல் இருக்கவும் இந்த ஸ்கீரின் கார்டுகளை பயன்படுத்துகிறார்கள். ஆனாலும் இந்த டெம்பர் கிளாஸ் ஓட்டும் போது, சில முக்கியமானவற்றை கவனத்தில் கொள்வது அவசியம். இல்லையென்றால் பல ஆயிரம் ரூபாய் கொடுத்து நீங்கள் ஆசை ஆசையாய் வாங்கி வைத்து இருக்கும் ஸ்மார்ட் போன்களை இது காலி செய்ய வைத்துவிடும். எனவே ஸ்மார்ட் போன்களுக்கு ஸ்கீரின் கார்டு ஒட்டும் போது எதையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

ஸ்மார்ட் போன் ஸ்கிரீனை பாதுகாப்பதுதான் ஸ்கிரீன் கார்டுகளின் முதன்மை நோக்கம். கீறல்கள், தூசி மற்றும் சிறிய அதிர்ச்சிகளிலிருந்து திரையைப் பாதுகாக்கின்றன. ஸ்கிரீன் கார்டு பொருத்தப்பட்டிருந்தால், உங்கள் ஸ்மார்ட்போனை மறுவிற்பனை செய்யும்போது சற்று அதிக விலை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

ஆனால், ஸ்கிரீன் கார்டு போடுவதால் சில தீமைகளும் உள்ளன.‌ குறைந்த தரமான ஸ்கிரீன் கார்டுகள் திரையின் தெளிவு மற்றும் நிற துல்லியத்தை பாதிக்கலாம். இதனால், படங்கள் மற்றும் வீடியோக்களைப் பார்க்கும்போது உங்களுக்கு சிறிது ஏமாற்றம் ஏற்படலாம்.

சில ஸ்கிரீன் கார்டுகள் தொடு உணர்திறனை குறைத்து, திரையில் உள்ள உங்கள் தொடுதலை துல்லியமாக பதிவு செய்யாமல் போகலாம். இது கேமிங் மற்றும் பிற செயல்பாடுகளை பாதிக்கலாம். ஸ்கிரீன் கார்டை பொருத்துவதில் சிறிய தவறு கூட, அதற்கும் திரைக்கும் இடையே குமிழ்கள் அல்லது தூசி துகள்கள் சிக்கிக்கொள்ள வழிவகுக்கும். இது திரையின் தோற்றத்தை கெடுத்து, தொடு உணர்திறனையும் பாதிக்கும்.

பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் உள்ள ஓலியோபோபிக் பூச்சு கைரேகைகள் மற்றும் எண்ணெய் கறைகளைத் தடுக்க உதவுகிறது. ஸ்கிரீன் கார்டை அடிக்கடி மாற்றுவது இந்த பூச்சை சேதப்படுத்தி, திரையில் கைரேகைகள் எளிதில் ஒட்டிக்கொள்ள வழிவகுக்கும். குறைந்த தரமான ஸ்கிரீன் கார்டுகள் போனை அதிகமாக வெப்பமடையச் செய்யும். எப்போதும் நல்ல தரமான ஸ்கிரீன் கார்டுகளைத் தேர்ந்தெடுக்கவும். பிரபலமான பிராண்டுகள் மற்றும் நல்ல விமர்சனங்கள் பெற்ற தயாரிப்புகளை வாங்கவும். மிகவும் தடிமனான ஸ்கிரீன் கார்டுகள் தொடு உணர்திறனை பாதிக்கலாம்.

Readmore: அந்த பெண் ஒன்றும் குழந்தை இல்லை..!! இனிப்பில் மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம்..!! இதற்கு ஏன் பலாத்கார வழக்கு பதிவு செய்தீங்க..?

KOKILA

Next Post

இன்று மாலை 16 கி.மீ "ரோடு ஷோ" செல்லும் CM ஸ்டாலின்..! பாதுகாப்பு பணியில் 2000 போலீசார்...!

Sat May 31 , 2025
மதுரையில் நாளை திமுக பொதுக் குழுவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். இன்று மாலை ரோடு ஷோ’ செல்கிறார். இதையொட்டி, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். திமுக மாநிலப் பொதுக் குழுக் கூட்டம் மதுரை உத்தங்குடியில் நாளை (ஜூன் 1) நடைபெறுகிறது. இதற்காக பிரம்மாண்ட அரங்கம் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முன்னதாக, இன்று மாலை ரோடு ஷோ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக விமானம் மூலம் முதல்வர் […]
MK Stalin dmk 1

You May Like