fbpx

’விசாரணை நடத்தவிடாமல் செந்தில் பாலாஜி அனைத்து வகைகளிலும் தடுத்தார்’..!! அமலாக்கத்துறை பரபரப்பு வாதம்..!!

குற்றம்சாட்டப்பட்டவரை காவலில் விசாரிப்பது அமலாக்கத்துறைக்கு இருக்கும் உரிமை; அதை யாராலும் மறுக்க முடியாது என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீடு வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அமலாக்கத்துறை சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதம் செய்தார். அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைக்காததன் காரணமாகவே கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டாலும் அமலாக்கத்துறை காவலில் இல்லை. விசாரணை நடத்தவிடாமல் செந்தில் பாலாஜி அனைத்து வகைகளிலும் எங்களை தடுத்தார். இடையூறு விளைவித்தார்.

செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் சிறையில் உள்ளதால் அவரை எங்களால் விசாரணைக்கு உட்படுத்த முடியவில்லை. லஞ்சம், ஊழல், பொதுமக்கள் பணத்தை கையாடல் செய்தல் என பல்வேறு புகார்கள் செந்தில் பாலாஜிக்கு எதிராக கொடுக்கப்பட்டுள்ளன. செந்தில் பாலாஜியிடம் வாக்குமூலம் பெற முயற்சித்தோம். அவர் ஒத்துழைப்பு தரவில்லை. 15 நாள் நீதிமன்ற காவல் காலாவதி என்பது அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் பொருந்தாது என்று அமலாக்கத்துறை வாதிட்டது.

மேலும், காவலில் வைத்து விசாரிக்கும் உரிமை அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகளுக்கு உள்ளது. தனிப்பட்ட முறையில் காவலில் எடுத்து செந்தில் பாலாஜியை விசாரிப்பது என்பது இந்த வழக்கில் மிக மிக முக்கியமானது. பிரதான குற்றச்சாட்டு தொடர்பாக விசாரிக்க முடியாமல் உள்ளது. விசாரணையில் செந்தில் பாலாஜி தாக்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கான மருத்துவ அறிக்கை இல்லை. செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என அமலாக்கத்துறை வலியுறுத்தியது.

மேலும், ஒருவர் நீதிமன்ற காவலில் இருக்கும்போது ஆட்கொணர்வு வழக்கு தாக்கல் செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. குற்றம்சாட்டப்பட்டவரை காவலில் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு உரிமை உள்ளது. அதை யாராலும் மறுக்க முடியாது. செந்தில் பாலாஜி மருத்துவமனை மற்றும் நீதிமன்ற காவலில் இருக்கும் நாட்களை விசாரணை காலமாக கருதக்கூடாது எனவும் அமலாக்கத்துறை கேட்டுக் கொண்டது.

Chella

Next Post

ப்ளீஸ் என்னை விட்ருங்க பாலியல் வன்கொடுமையை எதிர்த்து போராடிய பள்ளி மாணவி…..! ஆத்திரத்தில் இளைஞர்கள் செய்த கொடூர செயல் மாணவிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை….!

Wed Aug 2 , 2023
நாடு முழுவதும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவு அதிகரித்து வருகிறது என்று சொன்னாலும், அதிக அளவில் அது போன்ற தவறுகள் நடப்பது உத்தரப் பிரதேச மாநிலத்தில் தான் என்ற கருத்து பரவலாக இருந்து வருகிறது. அது பல சமயங்களில் உண்மையாகவும் இருந்திருக்கிறது. அந்த வகையில், உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு பள்ளி மாணவி பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டு இருந்தார். […]

You May Like