இன்று வெளியாகிறது முக்கிய அறிவிப்பு..!! மாநிலங்களவைக்கு செல்கிறார் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ்..?

LK 2025

தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் ஒதுக்குவது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


சென்னையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து நேற்று ஆலோசனை நடத்தினார். மாநிலங்களவை எம்.பி. சீட் வழங்குவது தொடர்பாக அதிமுக – தேமுதிக இடையே மோதல் போக்கு இருந்து வரும் நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பின்போது தேமுதிகவுக்கு ஒரு எம்பி சீட் ஒதுக்க எடப்பாடி பழனிசாமி ஒப்புதல் தெரிவித்ததாகவும், இதுதொடர்பான அறிவிப்பை இன்று வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் வழங்கப்படும்பட்சத்தில், தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் மாநிலங்களவை எம்பி ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எம்பி சீட் சுதீஷுக்கு தான் என்பது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிட்டதாம். அதாவது, சில வாரங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசியிருந்த எல்.கே.சுதீஷ், “தேமுதிகவுக்கு மாநிலங்களவையில் சீட் தருவதாக அதிமுக வாக்குறுதி அளித்தார்கள். அதி​முக அளித்த உத்​தர​வாதத்​தால் தான் நான் 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை” என தெரிவித்திருந்தார்.

யார் இந்த எல்.கே.சுதீஷ்..?

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்தின் தம்பி தான் எல்.கே.சுதீஷ். இவர், மறைந்த கேப்டன் விஜயகாந்த் நடித்த பல திரைப்படங்களைத் தயாரித்திருக்கிறார். பின்னர், விஜயகாந்த் அரசியலுக்கு வந்ததும் அவருக்கு பக்கபலமாக இருந்து செயல்பட்டு வந்தார். கடந்த 2005-இல் தென்​சென்னை மாவட்​ட தலை​மைப் பொதுக்​குழு உறுப்​பினராக நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து, 2006 சட்டமன்ற தேர்தலில் குடி​யாத்தம் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்​டி​யிட்​டார். 2009 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் மக்களவை தேர்தலில் போட்டியிட்டார். 2017இல் தேமுதிகவின் துணைப் பொதுச்​செய​லா​ளராக நியமிக்கப்பட்ட இவர், 2019ஆம் ஆண்டில் மீண்டும் பாஜக கூட்​ட​ணி​யில் கள்​ளக்​குறிச்​சி​யில் போட்டியிட்டார். அதைத் தொடர்ந்து கடந்த மாதம் தேமுதிகவின் பொருளாள​ராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தான், இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு மாநிலங்களவைக்கு தேமுதிக சார்பாக செல்ல உள்ளார் LK சுதீஷ்.

Read More : “இனி தைலாபுரம் தோட்டத்துக்கு யாரும் போகாதீங்க”..!! “பாமகவின் அதிகாரப்பூர்வ முகவரி இதுதான்”..!! புதிய அறிவிப்பை வெளியிட்ட அன்புமணி..!!

CHELLA

Next Post

5 ஆயிரம் மீட்டர்; 13:24.77 விநாடிகள்தான்!. ஆசிய தடகளத்தில் புதிய சாதனை!. தங்கம் வென்று இந்திய வீரர் அசத்தல்!

Sat May 31 , 2025
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தென் கொரியாவின் குமி நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் குல்வீர் சிங் 13:24.77 விநாடிகளில் கடந்து புதிய சாதனையுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். இதற்கு முன்னர் 2015-ம் ஆண்டு கத்தாரின் முகமது அல்-கார்னி 13:34.47 விநாடிகளில் இலக்கை எட்டியதே சாதனையாக இருந்தது. இதை தற்போது குல்வீர் சிங் முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார். […]
Gulveer Singh 11zon

You May Like