அமெரிக்காவிற்கு சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆளில்லா காரில் பயணம் செய்வது போன்ற வீடியோவை இணையத்தில் பதிவிட்டார். நாட்டில் கொரோனா பரவல் உள்ளிட்ட ஆயிரம் பிரச்சனைகள் நிலவி வரும் நிலையில் அமெரிக்காவிற்கு சுற்றுலா சென்று ஆளில்லா காரில் பயணித்து அகம் மகிழ்வது அவசியமா..? என அமைச்சர் மா.சுப்பிரமணியை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
இந்த நிலையில் ஓட்டுநர் இல்லாத கார் குறித்த விவாதம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் ஓட்டுநர் இல்லாத கார்களுக்கு அனுமதி கிடையாது என போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தெளிவுபடுத்தியுள்ளார். இப்போது கேள்வி என்னவென்றால், ஓட்டுநர் இல்லாத கார் எவ்வாறு பிரேக்குகளைப் பயன்படுத்துகிறது, அவசரகாலத்தில் அது எவ்வாறு செயல்படுகிறது என்பதுதான்.
ஓட்டுநர் இல்லாத காரில் பல வகையான சென்சார்கள் நிறுவப்பட்டுள்ளன, அவை எப்போது, எப்படி பிரேக்குகளைப் பயன்படுத்த வேண்டும் என்பதை உறுதி செய்கின்றன. இது தவிர, காரில் பல கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. இருப்பினும், இதை இன்னும் முற்றிலும் பாதுகாப்பானது என்று அழைக்க முடியாது. ஓட்டுநர் இல்லாத இந்த காரில் 360 டிகிரி சென்சார் பொருத்தப்பட்டுள்ளது, இதனால் கார் அருகில் யாராவது சென்றாலோ அல்லது விலங்குகள் சென்றாலும் கூட உணர முடியும். விபத்து நிகழ்வதற்கு முன் பிரேக்குகள் சிறந்த முறையில் செயல்படுகிறது.
Read more: தற்போது பரவும் கொரோனா பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தாது..!! – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்