கடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆன்லைன் கேமிங், கேசினோக்கள் மற்றும் குதிரைப் பந்தயங்கள் அனைத்திற்கும் ஒரே மாதிரியான 28% வரி விதிக்க முடிவு செய்யப்பட்டது. இது 3 வருடங்கள் அமைச்சர்கள் குழு ஆய்வுகளின் முடிவின் வாயிலாக எடுக்கப்பட்டது, ஆனால் இந்த அறிவிப்பு பெரும் விமர்சனங்களைப் பெற்றது. கோவா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்கள் தற்போது இருக்கும் 18 சதவீத ஜிஎஸ்டி வரியில் இருந்து 28 சதவீத வரி விதிப்பை மறு ஆய்வு செய்யக் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதில் முக்கியமாக தமிழ்நாட்டில் ஆன்லைன் கேமிங் மீது தடை விதிக்கப்பட்ட நிலையில் இந்த வரி விதிப்பு மூலம் தடை நீக்கப்படுமா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
கோவா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்கள் கசினோவில் அதிகப்படியான வர்த்தகம், வருமானத்தைக் கொண்டு இருக்கும் காரணத்தால் வரி விதிப்பில் முக்கியமான மாற்றங்கள் தேவை எனக் கூறிய நிலையில், இந்தப் புதிய வரிகள் அமலாக்கம் செய்யப்பட்ட பின்பு 6 மாதத்திற்குப் பின் மறு ஆய்வு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆன்லைன் கேமிங், கேசினோக்கள் மற்றும் குதிரைப் பந்தயங்கள் அனைத்திற்கும் ஒரே மாதிரியான முக மதிப்பில் 28% வரி விதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது, இதில் எவ்விதமான மாற்றமும் இல்லை.
உதாரணமாகக் கசினோவில் 1000 ரூபாய்க்கு Chips வாங்கி அதில் 100 ரூபாய்க்கான சிப்ஸ் பெட்டிங் செய்து 300 ரூபாய் மதிப்பிலான சிப்ஸ் வெற்றிபெற்றால் 1200 ரூபாய்க்கு 28 சதவீத வரி விதிக்கப்படாது, 1000 ரூபாய்க்கு தான் 28 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மேலும் ஆன்லைன் கேமிங், கேசினோக்கள் மற்றும் குதிரைப் பந்தயங்கள் மீது 28 சதவீத ஜிஎஸ்டி வரி நடைமுறைக்கு வரும் என்பதை ஜிஎஸ்டி கவுன்சில் சட்ட விதிகளில் மாற்றங்களைச் செய்து உரிய நாள் அறிவிக்கப்படும்.
இதேபோல் தமிழ்நாட்டில் இருக்கும் ஆன்லைன் கேமிங் மீதான தடைக்கு இந்த வரி விதிப்பில் மூலம் எவ்விதமான பாதிப்பும் இருக்காது. தமிழ்நாட்டில் தடை தொடரும். இதேபோல் விர்ச்சுவல் அசர்ட் அதாவது பிட்காயின் போனவற்றின் மூலம் ஆன்லைன் கேமிங்-ல் சேவை, பொருட்கள் வாங்கினால் அதற்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி பொருந்தும் என விளக்கம் கொடுக்கப்பட்டு உள்ளது.