வெள்ளி பொருட்களை தொடர்ந்து பயன்படுத்துவதால் அதன் பளபளப்பு தன்மையை இழந்து கருமையை மாறிவிடுகின்றன. வெள்ளியில் பயன்படுத்தும் அணிகலன்கள் உடல் சூட்டு காரணமாக கருமை நிறத்தில் மாறுகின்றன. எனவே கறை படிந்த வெள்ளி அணிகலன்கள் மற்றும் பொருட்களை சில வீட்டுப் பொருட்களைப் பயன்படுத்தி எப்படி சுத்தம் செய்வது என்று பார்ப்போம்.
ஒரு கிண்ணத்தில் தண்ணீரில் சிறிதளவு டூத் பேஸ்டை சேர்த்து கலக்கி அதில் சுத்தம் செய்ய நினைக்கும் வெள்ளிப் பொருளை சேர்த்து 10-15 நிமிடங்கள் அப்படியே விடவும். பிறகு பழைய டூத் பிரஷ் கொண்டு அதை தேய்த்த பின்னர் அவற்றை சுத்தமான நீரில் கழுவுவதன் மூலம் வெள்ளி பளிச்சென மாறும்.
வெள்ளை வினிகரை பேக்கிங் சோடாவுடன் கலந்து பேஸ்ட் போல் மாறியதும் அதை ஒரு மென்மையான துணியில் தடவி, வெள்ளியில் தேய்க்கவும். சிறிது நேரத்திலேயே வெள்ளிப் பொருட்கள் முன்பு போல் ஜொலிக்கத் தொடங்கும். இதற்குப் பிறகு சுத்தமான தண்ணீரில் கழுவவும்.
எலுமிச்சை சாறு இயற்கையாகவே பெரும்பாலான அழுக்குகளையும் கரைகளையும் நீக்கும் பண்புகளைக் கொண்டது. சிறிது எலுமிச்சை சாற்றை பேக்கிங் சோடாவுடன் கலந்து வெள்ளிப் பொருட்களை தேய்த்தால் அதன் நிறம் மாறும். பின்னர் சுத்தமான நீரில் கழுவி எடுத்தால் பழைய நிறத்திற்கு திரும்பும். 2 ஸ்பூன் டிஷ் சோப் அல்லது லிக்விட் சோப்பை எடுத்து 1 கப் வெதுவெதுப்பான நீரில் கலக்கவும். பின் அதில் வெள்ளிப் பொருட்களை வைத்து 10 நிமிடம் வைத்து எடுத்து பழைய டூத் பிரஷ் கொண்டு தேய்த்து சுத்தமான நீரில் கழுவினால் வெள்ளி பளபளப்பாக மாறிவிடும்.