தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர், திடீரென மாயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் எழுந்து கூட நிற்க முடியாமல் சுமார் 6 மாதங்கள் படுத்த படுக்கையாக இருந்த சமந்தா, அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை எடுத்த பின்னரே ஓரளவு உடல் நலம் தேறினார். இருப்பினும், சமந்தா இந்த பிரச்சனையில் இருந்து முழுமையாக குணமடையவில்லை என்பதால், தற்காலிகமாக திரைப்படங்களில் இருந்து விலகி, மயோசிடிஸ் நோய்க்கு சிகிச்சை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக கமிட் ஆகி இருந்த, ‘குஷி’ திரைப்படம் மற்றும், வருண் தவானுடன் ‘சிட்டாடல்’ ஆகிய வெப் தொடர்களில் நடித்து முடித்தார். மேலும், கமிட் ஆகி இருந்த படங்களில் இருந்து விலகியது மட்டுமின்றி, தயாரிப்பாளர்களிடம் இருந்து பெற்ற முன் தொகையையும் திருப்பிக் கொடுத்ததாக கூறப்படுகிறது. தன்னை ரிலாக்ஸ் ஆக வைத்துக் கொள்வதற்காக பாலி நாட்டுக்கு சென்று, வெக்கேஷனை என்ஜாய் செய்து வரும் சமந்தா, அதற்கு முன்னதாக தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு ஆன்மீக தலங்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
இந்நிலையில் சமந்தா பற்றிய தகவல் ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. தெலுங்கு சேனல் ஒன்று சமந்தா தற்போது பண நெருக்கடியால் கஷ்டப்பட்டு வருவதாகவும், தன்னுடைய சிகிச்சைக்காக பிரபல தெலுங்கு நடிகரிடம் இருந்து 25 கோடி கடனாக பெற்றுள்ளதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், அந்த நடிகர் யார் என்பது குறித்த எந்த விவரங்களை தெரிவிக்கவில்லை. அதேசமயம் இந்த செய்தி குறித்த, எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.