fbpx

ஆந்திராவில் திடீர் வன்முறை..!! தமிழகத்தில் இருந்து செல்லும் பேருந்துகள் நிறுத்தம்..!! பொதுமக்கள் அவதி..!!

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின்போது பயங்கர வன்முறை வெடித்ததால், தமிழ்நாட்டிலிருந்து சித்தூர், திருப்பதி செல்லும் பேருந்துகள் வேலூர், திருப்பத்தூர் பேருந்து நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

ஆந்திர அரசின் நீர் மேலாண்மை திட்டப்பணிகளை பார்வையிட தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு திட்டமிட்டிருந்தார். அதன்படி, சித்தூர் மாவட்டத்தில் உள்ள புங்கனூர் பகுதிக்கு அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தொண்டர்கள் சந்திரபாபு நாயுடுவின் கான்வாய் வாகனத்தை தடுக்க முயன்றனர். அப்போது, தெலுங்கு தேசம் கட்சியினருக்கும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. ஒருவரையொருவர் கற்கள், காலணி, மதுபாட்டில்கள் உள்ளிட்டவற்றால் தாக்கிக் கொண்டனர்.

வன்முறையை கட்டுப்படுத்த காவல்துறையினர் தடியடி மேற்கொண்டனர். இதில், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதனால் ஆவேசமடைந்த அவர்கள், காவல்துறையின் இரண்டு வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்தினர். இதையடுத்து, கண்ணீர் புகை குண்டுகளை வீசி வன்முறையில் ஈடுபட்ட இரு கட்சித் தொண்டர்களையும் விரட்டியடித்தனர்.

இதனால் தமிழகத்திலிருந்து சித்தூர், திருப்பதி செல்லும் பேருந்துகள் வேலூர், திருப்பத்தூர் பேருந்து நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து முடங்கியதால் வார இறுதி நாட்களில் திருப்பதி செல்ல இருந்த பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். முழு அடைப்புப் போராட்டம் முடிவுக்கு வந்த பிறகே பேருந்துகள் வழக்கம்போல இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

கணவரின் நண்பருடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பு……! இறுதியில் அதிரடி முடிவெடுத்த மனைவி……! கணவனுக்கு ஏற்பட்ட பரிதாப கதி……!

Sat Aug 5 , 2023
கணவரின் நண்பருடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதால், கள்ள காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை திட்டமிட்டு கொலை செய்த மனைவியை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து இருக்கிறார்கள். இந்த சம்பவம் ஆந்திர மாநிலத்தில் நடைபெற்றுள்ளது ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (35). இவர் காவல் துறையில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி சிவானி (30) இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இந்த நிலையில்தான், ரமேஷின் நண்பரான […]

You May Like