உத்தரகாண்ட் மாநிலத்தின் டேராடூன் நகரத்தில் உள்ள மின்கம்பங்கள் சுவர்கள், தெருக்களில் எல்லாம் “பிளேபாய் வேலைக்கு ஆட்கள் தேவை” என போஸ்டர் ஒட்டப்பட்டு இருக்கிறது. இந்த போஸ்டரில் ஆண் பாலியல் தொழிலாளி என ஆங்கிலத்தில் குறிக்கும் கிகோலோ வேலை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தினமும் ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் வரை சம்பாதிக்க, 2000 ரூபாய் முதலீடுடன் இந்த வேலைக்கு சேரலாம் என அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டேராடூனின் பெரும்பாலான பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு உள்ள நிலையில், காவல்துறையினரும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். கொரோனா நோய் தொற்று காலத்திற்கு பிறகு வேலை வாய்ப்பின்மை அதிகரித்துள்ள சூழலில், அவ்வாறு வேலை தேடி வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தவறான வழிக்கு செல்லும் சூழலை இந்த போஸ்டர் ஏற்படுத்தும் என சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். ஆண் பாலியல் தொழில் இந்தியாவிலும் நடைபெற்று வந்தாலும், அதற்காக வேலைக்கு ஆட்கள் தேவை என விளம்பரம் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதாகவும், சமூக சீர்கேட்டின் அடையாளம் எனவும் சமூக ஆர்வலர்கள் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பாக டேராடூர் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்