தெற்கு ரயில்வேயில் ALP/Technician, Junior Engineer, Guard/Train Manager பணிகளுக்கென 790 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது
பதவியின் பெயர்: ALP/Technician, Junior Engineer, Guard/Train Manager,காலிப்பணியிடங்கள்: 790.இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 18 முதல் 47 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும். விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், மேலும் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி, டிப்ளமோ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Pay Level 05, Pay Level 2, Pay Level 06 அளவின் படி மாதம் சம்பளம் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் Aptitude Test, Document Verification மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் https://gdce.srhqpb.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, போதிய ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.08.2023 ஆகும்.