தென்னிந்திய சினிமாவில் ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. இவர் தற்போது மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால், பெரும் பாதிப்பை சந்தித்ததாக அவரே இருந்த நிலையில், சமந்தா சிகிச்சை பெற்றுக் கொண்டு ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களை முடித்துவிட்டார். தற்போது சிகிச்சை பெற்று முழுமையாக குணமடைய வேண்டும் என்பதற்காக சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துள்ளார். முதலில் ஆன்மீக பயணம் அதன் பிறகு தோழிகளுடன் வெளிநாட்டு பயணம் என நேரத்தை செலவிட்டு வருகிறார்.
இந்நிலையில் சமந்தாவின் சிகிச்சை செலவுக்காக பிரபல நடிகரிடம் ரூ.25 கோடி கடன் வாங்கியதாக செய்திகள் வெளியானது. தற்போது இதற்கு நடிகை சமந்தா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோபமாக பதில் அளித்துள்ளார். ”மயோசிட்டிஸ் நோய் சிகிச்சைக்கு 25 கோடியா..? உங்களை யாரோ ஏமாற்றி உள்ளார்கள். நான் அதில் ஒரு சிறிய தொகையை தான் செலவு செய்தேன். நான் இத்தனை காலம் என்ன சம்பாதித்தேன் என்று நினைக்கிறீர்கள். என்னை எனக்கு பார்த்துக் கொள்ளத் தெரியும். இந்த நோய் பல ஆயிரம் பேருக்கு வருகிறது. சிகிச்சை பற்றி தவறான செய்தியை பரப்ப வேண்டாம்” என கூறியுள்ளார்.