மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இணைய சேவையும் பல பகுதிகளில் முடங்கியுள்ளது. இம்பால் பள்ளத்தாக்கிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வசிக்கும் மெய்டீஸ் மற்றும் மலைகளில் குடியேறிய குக்கி பழங்குடியினருக்கு இடையே, மெய்டீஸ் பட்டியல் பழங்குடியினர் (ST) பிரிவின் கீழ் சேர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் பேரில் தொடர்ந்து இனக்கலவரம் நடந்து வருகிறது. மே 3 ஆம் தேதி தொடங்கிய மோதலில் பலர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் மணிப்பூரில் குக்கி இனமக்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களை அடுத்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக. கூட்டணியில் உள்ள குக்கி மக்கள் கூட்டணி மாநிலத்தை ஆளும் பிரேன் சிங்தலைமையிலான அரசிற்கு வழங்கி வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக ஆளுநரிடம் கடிதம் வழங்கி உள்ளது.