fbpx

தமிழ்நாட்டில் வரும் 11ஆம் தேதி முதல் மஞ்சள் நிற பஸ்கள்..!! வெளியான சூப்பர் தகவல்..!!

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் புதிய மாற்றங்களை நோக்கி நடைபோட்டு வருகிறது. அந்தவகையில், தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

நீண்டதூர பேருந்து பயணம் என்றாலே, தமிழ்நாட்டை பொறுத்தவரை தனியார் நிறுவனங்கள்தான் சிறப்பான சேவைகளை வழங்கி வருவதாக பயணிகள் நினைக்கிறார்கள். அதற்கு முக்கிய காரணமே அரசுப் பேருந்துகளில் போதுமான அளவு வசதிகளும், முறையான பராமரிப்பும் இல்லை. மேலும், அரசுப் பேருந்துகள் தாமதமாக செல்கின்றன என்பது போன்ற குற்றச்சாட்டுகள் பரவலாக உள்ளது.

இந்த கருத்துக்களை மாற்றியமைக்கும் வகையில், தமிழ்நாடு அரசு அடுத்தடுத்த அதிரடிகளை கையில் எடுத்தது. குறிப்பாக, தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் உள்ள பேருந்துகளை புனரமைத்து, தனியார் பேருந்துகளுக்கு இணையான அளவில் சேவைகளை வழங்க முடிவு செய்யப்பட்டது. அத்துடன் போதுமான அளவுக்கு புதிய பஸ்களையும் வாங்கவும், ஏசி பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், முடிவு செய்யப்பட்டது. மேலும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 450 டவுன் பஸ்கள் வாங்குவதற்கான டெண்டர் வழங்கப்பட்டுள்ளது.

இதைத்தவிர, தமிழக அரசு போக்குவரத்துக் கழகம், தன்னுடைய பஸ்கள் அனைத்தையுமே புனரமைப்பதற்காக, டெண்டர் விடுக்கப்பட்டது. அதன்படி, பஸ்கள் புதுப்பிக்கப்படும்போது அதற்கு புதிதாக மஞ்சள் நிறம் அடிக்கப்பட முடிவு செய்யப்பட்டது. ஏற்கனவே, சில்வர் மற்றும் நீல நிறத்தில் இருக்கும் பஸ்கள், இப்போது மஞ்சள் நிறத்திற்கு மாறி வருகின்றன..

இந்நிலையில், மற்றொரு மகிழ்ச்சி செய்தி வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் 100 மஞ்சள் நிற பஸ்களின் சேவை வருகிற 11ஆம் தேதியே துவங்க போகிறதாம். 3,200 புதிய பஸ்கள், 1,000 புனரமைக்கப்பட்பட்ட பஸ்களை அரசு போக்குவரத்துக் கழகங்களில் இணைக்கும் பணி நடந்து வரும் நிலையில், இந்த தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து, அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தரப்பில் சொல்லும்போது, “அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள பணியாளர்களின் பற்றாக்குறையை போக்கவும், புதிய பஸ்களை இணைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக தயாராக உள்ள புனரமைக்கப்பட்ட, 100 மஞ்சள் நிற பஸ்கள் சேவை வரும் 11ஆம் தேதி துவங்க உள்ளது. ஒவ்வொரு பஸ்சுக்கும், ரூ.14 லட்சம் செலவழிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஒரு பஸ்சில், 54 இருக்கைகள் மட்டுமே இருக்கும்.

ஆனால், மஞ்சள் நிற பஸ்களில் 50 இருக்கைகள் மட்டுமே இருக்கும். மற்ற 900 மஞ்சள் நிற பஸ்களும் அடுத்தடுத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். போக்குவரத்து கழகங்களுக்கு புதிய ஓட்டுநர், நடத்துனர் பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதியும் அதே 11ஆம் தேதியே துவங்குகிறது” என்று தெரிவித்துள்ளனர்.

Chella

Next Post

அதிமுகவின் ’முக்கிய புள்ளி’ மருத்துவமனையில் அனுமதி..!! அந்த இடத்தில் கட்டியாமே..!! என்ன தான் ஆச்சு..?

Tue Aug 8 , 2023
அதிமுகவின் முன்னாள் அமைச்சரான திண்டுக்கல் சீனிவாசன் அப்போலோ மருத்துவமனையில் திடீரென்று அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிமுகவில் உள்ள மூத்த தலைவர்களில் ஒருவர் திண்டுக்கல் சீனிவாசன். இவருக்கு வயது 75 ஆகும். இவர், திண்டுக்கல் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் வனத்துறை அமைச்சராக பதவி வகித்தார். அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாளராக மாறினார். ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கம் […]

You May Like