யுனைட்டெட் பேங்க் ஆப் இந்தியாவின் பெங்களூரு கண்டோன்மென்ட் கிளையில் துபாயிலிருந்து மென்பொருள் கொள்முதலுக்காக கடன் பெற்ற நிறுவனம், இந்த நிதியை வேறு பணிகளுக்கு மாற்றியதோடு, பாதுகாப்புத் தொகையையும் செலுத்தாதது கண்டறியப்பட்டது. இதனால் வாராக்கடன் மூலம் வங்கிக்கு 18 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுத்தியதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இது தொடர்பான வழக்கை சிபிஐ பதிவு செய்து விசாரித்தது.
பெங்களூருவில் உள்ள சிபிஐ வழக்குகளை விசாரிக்கும் 21-வது நகர சிவில் மற்றும் அமர்வு நீதிபதியும் தனி நீதிமன்ற நீதிபதி முன் நடைபெற்ற இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேரில் 4 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், ஒருவர் மரணமடைந்ததால் வழக்கில் இருந்து நீக்கப்பட்டார். எஞ்சிய 6 பேரில் ஒருவருக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனையும், 12 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.