Gold Rate: வார கடைசியில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!! இன்னைக்கே கிளம்புங்க..

gold 3 1

ஜூன் மாதம் தொடங்கியதிலிருந்தே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் அதாவது ஜூன் 1ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் விலை ரூ.71,360 ஆக இருந்த நிலையில் ஆறு நாள்களில் படிப்படியாக ரூ.1680 வரை உயர்ந்து, ரூ.73,040க்கு விற்பனை செய்யப்பட்டது. அதுபோல, வாரத் தொடக்கத்தில் ரூ.8,920 ஆக இருந்த ஒரு கிராம் தங்கம், படிப்படியாக ரூ.210 அதிகரித்து இன்று ரூ.9130க்கு விற்பனையானது.


இந்த வாரம் முழுக்க தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வந்த நிலையில், நேற்றைய தினம் தங்கம் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து விலை உயருமா குறையுமா என எதிர்பார்த்த மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக ஜூன் 7 ஆம் தேதியான இன்று தங்கம் விலை குறைந்தது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்து ரூ.71,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.150 குறைந்து, ஒரு கிராம் ரூ.8980க்கும், சவரனுக்கு ரூ.1200 குறைந்து, ஒரு சவரன் ரூ.71,840க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.105 குறைந்து, ஒரு கிராம் ரூ.7385க்கும், சவரனுக்கு ரூ.840 குறைந்து, ஒரு சவரன் ரூ.59,080க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு ரூ.1 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.117க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,17,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Read more: மாரடைப்பு, பக்கவாதத்தை தடுக்கும் புதிய மருந்து.. பக்க விளைவுகள் கிடையாது..!! – விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

Next Post

“நடிச்சது வெறும் 5 படங்கள் தான்”..!! “ஆனா இப்போ லெவலே வேற”..!! ரூ.300 கோடிக்கு சொந்தக்காரியான பிரபல தமிழ் நடிகை..!!

Sat Jun 7 , 2025
சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலம் ஆனவர்கள், தாங்கள் வளர்ந்த பிறகு நடிக்கும் படங்களில் பிரபலம் ஆவதில்லை. அப்படி பிரபலமானவர்களில் ஹீரோக்களே அதிகம். ஆனால் ஹீரோயின் ஒருவர் குழந்தை நட்சத்திரத்திலும், ஹீரோயினாக நடிக்கும் போதும் முதல் படத்திலேயே பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகிவிட்டார். அந்த நடிகை யார் என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். அவர் வேறு யாரும் இல்லை நடிகை ஷாலினி தான். இவர், முதல் முறையாக 4 வயதில் மலையாளத்தில் […]
Shalini 2025

You May Like