இந்தியாவில் தொலைத்தொடர்புத்துறை அமைச்சகம் சார்பில் ‘Sanchar Saathi’ என்ற இணையதளம் துவங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இனி மக்கள் அவர்களின் தொலைந்துபோன ஸ்மார்ட்போன்களை ட்ரேக் செய்து கண்டுபிடிக்கவும் அல்லது வேறு யாரும் பயன்படுத்தாமல் இருக்க ‘Block’ செய்யவும் முடியும். இதன் மூலம் உங்களின் தொலைந்துபோன ஸ்மார்ட்போன்களின் விவரங்கள் பாதுகாக்கப்படும். இதை நமது மொபைல் எண் மூலம் இலவசமாக பயன்படுத்தலாம்.
எப்படி பயன்படுத்துவது: ‘Sanchar Saathi Portal’இணையதளம் சென்று ‘Register’ செய்யவும். பின் ‘Find Stolen/Lost Device’ போன்ற ஆப்ஷன்கள் இருக்கும். உங்களின் விவரம், மொபைல் எண், IMEI போன்ற விவரங்களை உள்ளிடவேண்டும். பின்னர் எங்கு தொலைத்தீர்கள் என்ற விவரங்கள் எல்லாம் கேட்கப்படும். மொபைல் எண் பதிவிட பின்னர் உங்களுக்கு ஒரு OTP எண் வரும். அதை உள்ளிட்டால் நீங்கள் புதிய கணக்கை துவக்கலாம். உங்கள் கணக்கை துவக்க பெயர், இமெயில், பாஸ்வேர்ட் போன்றவற்றை பதிவிடவேண்டும். பின்னர் கணக்கை துவக்கியதும் உள்ளே செல்லவும். உங்கள் காணாமல் போன மொபைல் எண்ணின் ‘IMEI’ நம்பர் பதிவிட்டு தேடவேண்டும். உங்கள் மொபைல் தற்போது எங்கு உளது என்பதை அது துல்லியமாக காட்டிவிடும். பின்னர் ஸ்மார்ட்போனை ‘Block/Stolen’ ஆப்ஷனை கிளிக் செய்து வேறு யாரும் பயன்படுத்தமுடியாமல் செய்யலாம்.
Unblock செய்வது எப்படி: முதலில் ‘Sanchar Saathi’ இணையதளம் செல்லவும். நீங்கள் Block செய்ய பயன்படுத்திய ID உள்ளிடவும். உங்களின் மொபைல் எண் மற்றும் Unblock செய்வதற்கான காரணங்களை உள்ளிடவும். Captcha சரியாக பதிவிட்டவுடன் உங்கள் மொபைல் எண்ணிற்கு OTP ஒன்று கிடைக்கும். OTP பதிவிட்ட பிறகு Submit பட்டன் வலிக்க செய்தால் உங்கள் போன் Unblock ஆகிவிடும்