fbpx

”இதெல்லாம் உன்னால வாங்க முடியாது”..!! தன்மானத்தை சீண்டிய கடைக்காரர்..!! அனைத்தையும் விலைக்கு வாங்கி அடித்து நொறுக்கிய வாலிபர்..!!

நூடுல்ஸ் வாங்க சென்றபோது கடைக்காரர் அவமானப்படுத்தியதால், ஆத்திரமடைந்த வாடிக்கையாளர் கடையில் இருந்த அனைத்து நூடுல்ஸ் பாக்கெட்டுகளையும் வாங்கி தரையில் போட்டு நாசம் செய்துள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சீனாவின் சாண்டாங்க் மாகாணத்தில் உள்ள ஒரு நூடுல்ஸ் கடைக்கு வாடிக்கையாளர் ஒருவர் சென்றுள்ளார். அங்கிருந்த கடைக்காரரிடம் நூடுல்ஸ் விலை குறித்து கேட்டுள்ளார். அதற்கு அவர் ஒரு கிண்ணம் நூடுல்ஸ் இந்திய மதிப்பில் ரூ.164 என கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர், விலை மிகவும் அதிகமாக உள்ளதே என கூறியுள்ளார்.

இதனால், கடைக்காரருக்கும் வாடிக்கையாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, கடைக்காரரின் மகன் திடீரென எழுந்து வந்து அந்த வாடிக்கையாளரிடம் “உங்களால் நூடுல்ஸை வாங்க முடியாது என்றால் வெளியே போங்க” என்று ஆவேசமாக கூறியுள்ளார். இதனால், அந்த வாடிக்கையாளர் தான் அவமானப்படுத்தப்பட்டது போன்று உணர்ந்தார்.

இதையடுத்து, உடனே அவர் கடைக்காரரிடம் கடையில் உள்ள அனைத்து நூடுல்ஸ் பாக்கெட்டுகளும் சேர்ந்து என்ன விலை என கேட்டார். அதற்கு அவர் ரூ.9,920 என்றார். உடனே அந்த பணத்தை கொடுத்து அனைத்து நூடுல்ஸ் பாக்கெட்டுகளையும் வாடிக்கையாளர் வாங்கினார். பின்னர், அவை அனைத்தையும் தரையில் அடித்து நொருக்கி தனது ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Chella

Next Post

பிரபல நடிகை ஜெயப்பிரதாவுக்கு 6 மாதம் சிறை..!! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!! என்ன வழக்கு தெரியுமா..?

Fri Aug 11 , 2023
நடிகையும் முன்னாள் எம்பியுமான ஜெயப்பிரதாவுக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து எழும்பூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நடிகை ஜெயப்பிரதா, தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் பின்னர் இந்தி திரையுலகிலும் கொடி கட்டிப் பறந்தார். கடந்த 1994ஆம் ஆண்டு முதல் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார் ஜெயப்பிரதா. இவரது அரசியல் பயணம் தெலுங்குதேசம் கட்சியில் தொடங்கி உ.பியின் சமாஜ்வாதி கட்சி வரை நீடித்தது. கடந்த […]

You May Like