சினிமா விமர்சகரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன், ரஜினியின் மகள் ஐஸ்வர்யா பற்றி ஒரு அதிர்ச்சி தகவலை கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ”ரஜினியின் மகள் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதால் விரைவில் அவர்களது வீட்டில் வளைகாப்பு நடக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா, தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர்கள் இருவரும் விரைவில் சேர்ந்து வாழ உள்ளதாக அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்திருக்கிறார்.
ரஜினியின் மகள் சௌந்தர்யா, அஸ்வின் ராம்குமார் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு வேத் என்ற ஒரு மகனும் உள்ளார். இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர். பின்னர், விசாகன் என்பவரை சௌந்தர்யா திருமணம் செய்து கொண்டார். இவருக்கும் நடிகராக வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது. ஆனால், இதைக் கேள்விப்பட்ட ரஜினி, மறுத்துவிட்டதாக பயில்வான் கூறியிருக்கிறார்.
தற்போது சௌந்தர்யா 6 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். அவருக்கு பிரம்மாண்டமாக வளைகாப்பு நடத்தலாம் என்று யோசித்த நிலையில், ரஜினி மறுத்து விட்டாராம். ஏனென்றால், கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்பது போல திருஷ்டியால் நமக்கு நிறைய சோதனை வந்துவிட்டது. அதனால், வளைகாப்பு நிகழ்ச்சியை எளிமையாக நடத்தலாம் என ரஜினி சொல்லிவிட்டாராம்.
அதாவது, சௌந்தர்யா மற்றும் விசாகன் தம்பதிக்கு கடந்த ஆண்டு வீர் என்ற ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், இப்போதுதான் அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்று பயில்வான் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. இதனைக் கேட்ட ரசிகர்கள் கடந்த ஒரு வருடமாக பயில்வான் கோமாவில் இருந்திருப்பார் போல என கமெண்ட் அடித்து வருகின்றனர்.