கச்சா பாமாயில், கச்சா சூரியகாந்தி, கச்சா சோயாபீன் எண்ணெய் ஆகியவை மீதான அடிப்படை சுங்கவரி 10% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பாமாயில், சூரியகாந்தி உள்ளிட்ட சமையல் எண்ணெய்களின் விலை தற்போது கணிசமாக குறைந்துள்ளது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ரூ.135 என்ற நிலையில் இருந்த பாமாயில், தற்போது ரூ.125-க்கு விற்பனையாகிறது. சூரியகாந்தி எண்ணெய்யும் லிட்டருக்கு ரூ.10 வரை குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.
பாமாயில், சூரியகாந்தி, சோயாபீன் எண்ணெய்களுக்கான இறக்குமதி வரி 10% குறைக்கப்பட்டதால், 27.5 சதவீதத்தில் இருந்து 16.5 சதவீதமாக மாறியுள்ளது. சமையல் எண்ணெய் வியாபாரிகள் கொடுத்த தகவலின் படி, ஒரு லிட்டர் பாமாயில் ரூ.135இல் இருந்து ரூ.125ஆக குறைந்துள்ளது. 850 மி.லி. கொண்ட பாக்கெட் பாமாயில் ரூ.112-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை கடந்த வாரத்தில் ரூ.126 என்று விற்பனையானது.
அதேபோல், சூரியகாந்தி எண்ணெய் விலையும் குறைந்துள்ளது. கடந்த வாரத்தில் 850 மி.லி. சூரியகாந்தி எண்ணெய் ரூ.146 – ரூ.155 வரை விற்பனையானது. தற்போது, ரூ.136இல் இருந்து ரூ.150 வரை விற்பனையாகிறது. அதேநேரம் தேங்காய் எண்ணெய் விலை குறையவில்லை. மொத்த மார்க்கெட்டில் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு தேங்காய் எண்ணெய் ஒரு லிட்டர் ரூ.260-க்கு விற்பனையானது.
ஆனால், தற்போது ரூ.400 வரை விற்கப்படுகிறது. வெறும் 45 நாளில் தேங்காய் எண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.140 உயர்ந்துள்ளது. தேங்காய் எண்ணெய்யின் விலை மேலும் அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தேங்காய் எண்ணெய்க்கான கொப்பரைக்கு கடும் தட்டுப்பாடு இருப்பதால் தான், இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.
Read More : மாணவர்களே..!! மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..!! கட்டணம் எவ்வளவு..? விவரம் உள்ளே..!!