fbpx

VIjay | ”நெல்சா.. ஜெயிலர் சூப்பர்”..!! ஃபோனில் வாழ்த்து சொன்ன நடிகர் விஜய்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் வசூலை வாரிக்குவித்து வருகிறது. இந்நிலையில், நடிகர் விஜய் இயக்குனர் நெல்சனுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். நெல்சன் இதற்கு முன்னர் விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கினார். இப்படம் தோல்வியை சந்தித்தாலும் நெல்சன் மீதுள்ள நட்பின் காரணமாக அவருக்கு போன் செய்து வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார் விஜய்.

மேலும், ஜெயிலர் திரைப்படம் உருவாக முக்கிய காரணமே விஜய் தானாம். பீஸ்ட் படப்பிடிப்பின்போது, ரஜினிக்கு கதை சொல்லுமாறு நெல்சனுக்கு ஊக்கம் கொடுத்து அவரை அனுப்பி வைத்ததே விஜய் தான் என்று கூறப்படுகிறது. இதை நெல்சனே ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவில் கூறி இருந்தார். அதுமட்டுமின்றி, எப்போதும் காலையில் லேட் ஆக எழுந்திருக்கும் நெல்சனை, ஜெயிலர் படத்தின் முதல்நாள் படப்பிடிப்புக்கு போன் போட்டு எழுப்பிவிட்டதே விஜய் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

ஷாக்கிங்..!! 3 பேரை கொடூரமாக கடித்த குதிரை..!! விரட்டிச் சென்ற பொதுமக்கள்..!! பள்ளத்தில் விழுந்து பலி..!!

Fri Aug 11 , 2023
கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினத்தைச் சேர்ந்த லோகேஷ்வரன் (15) என்ற மாணவன், மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி முடிந்து, தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சுக்கு சென்றுள்ளார். அங்கு சவாரி செல்லும் குதிரையின் அருகில் சென்றபோது, திடீரென அந்த குதிரை லோகேஷ்வரனை கடித்துள்ளது. இதில் பதறியடுத்துக் கொண்டு சிறுவன் அங்கிருந்து ஓடத் தொடங்கினான். ஆனால், அந்த குதிரை விடாமல் துரத்திச் சென்று சிறுவனை கடித்ததுடன், காலால் எட்டி […]

You May Like