fbpx

எல்.ஐ.சியின் பங்குகள் திடீர் உயர்வு….! காரணம் இதுதான்…..!

தற்போது, இந்திய காப்பீட்டு கழகமான எல்ஐசியின் பங்குகள் திடீரென்று அதிகரித்துள்ளது.

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் ஏப்ரல் மற்றும் ஜூன் காலாண்டு, நிகர லாபம் பல மடங்கு அதிகரித்து, ரூபாய் 9,544 கோடி அதிகரித்ததையடுத்து, அதன் பங்குகள் சற்றேர, குறைய 3 சதவீத லாபத்துடன் முடிவடைந்து இருக்கிறது.

மும்பை பங்குச்சந்தையில் ஒரு பங்கின் விலை 2.78 சதவீதம் அதிகரித்து, 659.95 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இது ஒரே நாளில் 5.42 சதவீதம் அதிகரித்து, ரூ.676.95 என இருக்கிறது. அதேபோல, தேசிய பங்குச் சந்தையில் 2.85 சதவீதம் அதிகரித்து, ரூபாய் 6,60 ஆக நிலை பெற்றிருக்கிறது.

மும்பை பங்குச் சந்தையை பொறுத்தவரையில், 4.71 லட்சம் பங்குகளும், தேசிய பங்கு சந்தையில் 52.54 லட்சம் பங்குகளும் வர்த்தகமாகி இருக்கிறது.

பொதுத்துறையைச் சேர்ந்த ஆய்வு காப்பீட்டு நிறுவனம் சென்ற நிதியாண்டின் இதே காலகட்டத்தில், 683 கோடி ரூபாய் நிகர லாபம் பெற்று இருந்தது. ஜூன் காலாண்டில், ஒட்டுமொத்த வருவாய் 1,68,881 கோடியிலிருந்து, 1,88,749 கோடி என அதிகரித்ததாக எல்ஐசி நிறுவனம் தெரிவித்துள்ளது.

2022-23ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலாண்டில் முதலீடுகள் மூலமாக ஈட்டப்பட்ட நிகர வருவாய் 69.571 கோடியிலிருந்து,அதிகரித்து, ரூ.90,309 கோடி என அதிகரித்துள்ளது.

சொத்துக்களை பொறுத்தவரையில், ஒட்டுமொத்த வாரா கடன் விகிதம் 5.84 சதவீதத்தில் இருந்து, 2.48 சதவீதமாக குறைந்து இருக்கிறது.

Next Post

நான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன்...! கர்நாடகா துணை முதல்வர் சிவகுமார் பரபரப்பு...!

Sat Aug 12 , 2023
ஒப்பந்ததாரர்களிடம் லஞ்சம் வாங்கியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் உண்மை என நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன் என கர்நாடக துணை முதல்வர் டிகே சிவகுமார் தெரிவித்துள்ளார். கர்நாடக அரசு தங்களுக்கு நிலுவையில் உள்ள நிலுவைத் தொகையை வழங்கவில்லை என்றும், சில BBMP ஒப்பந்ததாரர்கள் தற்போதைய அரசாங்கம் 15 சதவீத கமிஷன் கேட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த துணை முதல்வர் சிவக்குமார், “முன்னாள் முதல்வர் பசவராஜ் […]

You May Like