‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா (Andrea Jeremiah). பின்னர், ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், தரமணி, வடசென்னை உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில், தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார். இந்த படங்களின் மூலம் பிரபலமான ஆண்ட்ரியாவுக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உண்டு.
தற்போது இவர், மிஸ்கின் இயக்கத்தில் உருவாகும் கா மற்றும் பிசாசு 2 படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது “அனல் மேல் பனித்துளி” என்ற படத்திலும் ஆண்ட்ரியா நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் வெற்றிமாறன் தயாரித்துள்ளார். இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்ற நிலையில், பல தகவல்களை ஆண்ட்ரியா கூறியுள்ளார்.
அதாவது, ”அனல் மேல் பனித்துளி” திரைப்படத்தில் ஒரு காட்சியில் நடிக்கும்போது மிகவும் அரு வெறுப்பாகவும், கூச்சமாகவும் இருந்தது. இந்த படத்தில் நடித்தது புதுமையாக இருந்தது. இதில் நடித்த ஒரு சில காட்சிகள் அருவருக்கத்தக்க வகையில் இருந்தது. என் நிஜ வாழ்க்கையில் இதை விட பல சம்பவங்கள் நடந்துள்ளது” என ஆண்ட்ரியா கூறியுள்ளார்.