சோகம்!. பிரபல காமெடி நடிகர் டெலிபோன் சுப்ரமணி காலமானார்!. திரை பிரபலங்கள் இரங்கல்!

Telephone Subramani 11zon

காமெடி மற்றும் குணச்சித்திர நடிகரான டெலிபோன் சுப்பிரமணி, உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 67.


தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக வலம் வந்தவர் டெலிபோன் சுப்பிரமணி. இவர் ஜெயம் ரவியின் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, வடிவேலுவின் எலி, யுனிவர்சிட்டி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகர் விவேக் உடன் சேர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் நுழைவதற்கு முன்பு, இவர் தொலைத்தொடர்பு துறையில் பணியாற்றியதால் ‘டெலிபோன்’ சுப்பிரமணி என்று அனைவராலும் அழைக்கப்பட்டார். தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர் மற்றும் சின்னத்திரை நடிகர் சங்க உறுப்பினராகவும் உள்ளார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இவர், நேற்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 67 ஆகும். அவரது உடலுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Readmore: முந்திய வடக்கு மாநிலங்கள்..! தமிழ்நாடு உட்பட தென்னிந்திய மாநிலங்களில் குழந்தை பிறப்பு விகிதம் பெரும் சரிவு!. என்ன காரணம்!.

KOKILA

Next Post

"பெண் நீதிபதிகளின் பாதுகாப்பு-கண்ணியத்தில் சமரசம் இல்லை"!. வழக்கறிஞர் ரத்தோரின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!

Wed Jun 11 , 2025
பெண் நீதிபதிகளின் பாதுகாப்பு மற்றும் கண்ணியம் தொடர்பான விஷியத்தில் நீதித்துறை சமரசம் செய்ய முடியாது என்று கூறி பெண் நீதிபதியை அவமதித்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட வழக்கறிஞரின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2015ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி டெல்லியில் நீதிமன்ற அறைக்குள் பெண் நீதிபதியை வாய்மொழியாகத் தாக்கி பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட வழக்கறிஞர் சஞ்சய் ரத்தோருக்கு 2 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. […]
Supreme Court 2025 1

You May Like