ரஜினியின் கூலி படம் முழுக்க விசில் பறக்கும் என்று தெரிவித்துள்ள நடிகர் நாகார்ஜுனா, லோகேஷ் கனகராஜை பாராட்டி பேசி உள்ளார்.
நடிகர் நாகார்ஜுனா நடிப்பில் இந்த ஆண்டு இரண்டு முக்கிய படங்கள் வெளியாக உள்ளன. ஒன்று.. சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி வரும் ‘குபேரா’, மற்றொன்று லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் ‘கூலி’. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் கூலி படத்தில் நாகார்ஜுனா ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார்.
இந்த நிலையில் கூலி படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து நாகார்ஜுனா மனம் திறந்து பேசினார். பிரபல ஆங்கில யூ டியூப் சேனலுக்கு பேட்டியளித்த அவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜை புகழ்ந்து பேசினார். மேலும் ” லோகேஷ் ஒரு விசில் காரணி. கூலி படத்தின் போது நான் சென்னையின் தெருக்களில் அவருடன் இருந்தேன், அவருக்கு ஒரு பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. நாங்கள் மதிய உணவிற்கு வெளியே சென்றோம், மக்கள் அவரைத் தேடி வந்து கொண்டே இருந்தனர். அவரே ஒரு விசில் காரணி தான்,” என்று அவர் கூறினார்.
லோகேஷின் சிறப்பு என்ன என்பதை விளக்கிய நாகார்ஜுனா, “முந்தைய படங்களில் லோகேஷின் கதாபாத்திரங்கள் அருமையானவை. எனக்குப் பிடித்த படம் ‘விக்ரம்’, ஃபஹத் ஃபாசிலின் கேரக்டர், விஜய் சேதுபதியின் கேரக்டர் மற்றும் ஏஜென்ட் டினா ஆகியோரின் கதாபாத்திரங்களும் அற்புதமானவை. ‘கூலி’ படத்தில், ரஜினி சாரை தவிர, கன்னடத்திலிருந்து உபேந்திரா, இந்தியிலிருந்து அமீர் கான், நான், இந்த கதாபாத்திரங்கள் அனைத்தும் தனித்து நிற்கின்றன. அதுதான் ‘கூலி’ படத்தின் பிளஸ் பாயிண்ட்.
லோகேஷின் படம் இயக்கும் பாணி குறித்து பேசிய அவர், “லோகேஷ் ஒரு இயக்குனர் என்பதை தாண்டி பெரிய மனிதர்., ’அறைக்குள் நுழையும்போது புலி போல உள்ளே வாங்க’ என்று கூறுவார். உங்கள் கண்களை பார்க்கும் போதே மக்கள் பயப்பட வேண்டும் என்று கூறுவார். என்ன வேண்டும் என்பதில் தெளிவாக அவர் இருக்கிறார். அது சரியா, தவறா, ரசிகர்களுக்கு பிடிக்குமா என்பதை பற்றி எல்லாம் எல்லாம் அவருக்கு கவலையில் இல்லை. அவருக்கு என்ன வெண்டும் என்பதில் தெளிவாக இருப்பதால் படங்களை சீக்கிரம் முடித்து விடுவார்.” என்று தெரிவித்தார்.
இயக்குனர் லோகேஷுக்கு நன்றி தெரிவித்த நாகார்ஜுனா தனது கதாபாத்திரம் குறித்த சில விவரங்களைப் பகிர்ந்து கொண்டார்: ” கூலி படத்தில் எனக்கு மிக முக்கியமான கதாபாத்திரம் உள்ளது. லோகி என்னை அறிமுகப்படுத்திய விதத்திற்கு நான் நன்றி சொல்ல வேண்டும். ‘கூலி’ ஒரு முழுமையான விசில் படம்.. அதாவது படம் விசில் பறக்கும் அளவுக்கு இருக்கும்..” என்று கூறினார்..
ரஜினிகாந்த் மற்றும் நாகார்ஜுனாவைத் தவிர, ‘கூலி’ படத்தில் அமீர் கான், உபேந்திரா மற்றும் ஸ்ருதி ஹாசன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. ஆகஸ்ட் 14 ஆம் தேதி உலகளவில் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் பிற இந்திய மொழிகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : கமல்ஹாசனின் தக்லைஃப் படத்திற்கு தடை விதித்த விவகாரம்.. கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்..