குட்நியூஸ்.. இன்று அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?

Gold Rate today 1

சென்னையில் இன்று தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 74,440க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா காலக்கட்டத்தில் உலக பொருளாதாரமே முற்றிலும் மாறியது.


அந்த வகையில் கடந்த வாரம், தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது. கடந்த வாரம் மட்டும் 3,000 வரை தங்கம் விலை உயர்ந்தது.. இந்த நிலையில் சென்னையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.15 குறைந்து, ரூ. 9305க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 74,440க்கு விற்பனையாகிறது. எனினும் இன்று வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.120க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,20,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

RUPA

Next Post

அப்துல் கலாமுடன் பணியாற்றிய இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை சு.முத்து காலமானார்..!!

Mon Jun 16 , 2025
இஸ்ரோவில் பணியாற்றிய புகழ்பெற்ற முன்னாள் விஞ்ஞானியும், தமிழறிஞருமான நெல்லை சு.முத்து திருவனந்தபுரத்தில் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். ஸ்ரீ ஹரிகோட்டா சதீஸ் தவான் விண்வெளி மையத்தில் முதன்மை விஞ்ஞானியாகப் பணியாற்றியவர். அறிவியல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி துறையில் சிறப்பாக பங்களித்த இவர், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் கொண்டவர். கல்வி, அறிவியல் சார்ந்த விழிப்புணர்வை வளர்க்கும் நோக்கில் அவர் எழுதிய நூல்கள் தமிழ் வாசகர்களிடையே பெரும் […]
Nellai Su.Muthu

You May Like