இன்று மதியம் திடீரென ஜியோ நெட்வொர்க் முடங்கியதால் ஆயிரக்கணக்கான பயனர்கள் அவதியடைந்துள்ளனர்.
இந்தியாவின் முன்னணி நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ இருந்து வருகிறது. கோடிக்கணக்கான பயனர்கள் ஜியோ நெட்வொர்க்கை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்தியா முழுவதும் உள்ள ரிலையன்ஸ் ஜியோ பயனர்கள் பரவலான நெட்வொர்க் பிரச்சனைகளை சந்திப்பதாக புகாரளித்து வருகின்றனர். இணைய இணைப்பு, மொபைல் சிக்னல்கள் மற்றும் ஜியோ ஃபைபர் சேவைகள் தொடர்பான சிக்கல்கள் குறித்து புகார் கூறி உள்ளனர்.. ஜூன் 13 அதிகாலையில் இந்த செயலிழப்பு தொடங்கியதாகத் தெரிகிறது, அதன் பின்னர் பாதிக்கப்பட்ட பயனர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது.
மதியம் 1:30 மணியளவில் இந்த சிக்கல் முதலில் ஏற்பட்ட போது சுமார் 200 பயனர்கள் ஜியோவின் நெட்வொர்க்கை அணுகுவதில் சிக்கல்கள் குறித்து புகாரளித்தனர்., பிற்பகல் 2:17 மணிக்கு, அந்த எண்ணிக்கை 12,000 க்கும் அதிகமாக உயர்ந்தது என்று டவுண்டிகெக்டர் நிறுவன தரவுகள் தெரிவிக்கின்றனர்.
இவற்றில் பெரும்பாலான புகார்கள் இண்டெர்நெட் இடையூறுகள் தொடர்பானவை, கிட்டத்தட்ட 56 சதவீத பயனர்கள் மொபைல் டேட்டாவில் சிக்கல்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளது. 29 சதவீதம் பேர் மொபைல் நெட்வொர்க்கில் சிரமப்படுவதாகவும், சுமார் 15 சதவீதம் பேர் ஜியோ ஃபைபரில் சிக்கல்களை எதிர்கொள்வதாகவும் கூறப்படுகிறது.
இதனால் அவதியடைந்த பயனர்கள் எக்ஸ் வலைதள பக்கத்தில் இத்து தொடர்பாக அதிருப்தியை பதிவிட்டு வருகின்றனர். தொலைபேசிகளில் “சேவை இல்லை” செய்திகளையும், சிக்னல் இல்லாததை காட்டும் ஸ்கிரீன் ஷாட்களைப் பகிர்ந்து வருகின்றனர். பலர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்தை டேக் செய்து விளக்கம் கோருகின்றனர். இருப்பினும், தற்போது வரை, ரிலையன்ஸ் ஜியோ இந்த செயலிழப்பு குறித்தோ அல்லது அதற்கான காரணம் குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை.
இந்தப் பிரச்சனை பல பிராந்தியங்களில் உள்ள பயனர்களைப் பாதித்து வருவதாகத் தெரிகிறது, இருப்பினும் இந்தப் பிரச்சினை நாடு தழுவியதா அல்லது குறிப்பிட்ட மண்டலங்களுக்கு மட்டுமே உள்ளதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஜியோ நிறுவனம் கடந்த காலங்களில் சிறிய அளவிலான செயலிழப்புகளைச் சந்தித்திருந்தாலும், தற்போது அதிகப்படியான புகார்கள் அதிகரித்திருப்பது கடுமையான தொழில்நுட்ப சிக்கலையை காட்டுகிறது..
இந்த இடையூறுக்கு என்ன காரணம் என்பது குறித்து இன்னும் எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை. தற்காலிக நெட்வொர்க் செயலிழப்பை ஏற்படுத்திய தொழில்நுட்ப புதுப்பிப்பு காரணமாக இந்த பிரச்சனை ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.. ஆனால் பயனர்கள் தொலைத்தொடர்பு நிறுவனத்திடமிருந்து அதிகாரப்பூர்வ விளக்கத்திற்காக காத்திருக்க வேண்டியிருக்கும்.
அதுவரை, பயனர்கள் பொறுமையாக இருந்து, தங்கள் சாதனங்களை ரீ ஸ்டார்ட் செய்வது அல்லது நெட்வொர்க்கில் மீண்டும் பதிவு செய்ய ஏரோபிளேன் மோடு போட்டுவிட்டு மீண்டும் மாறுவது போன்ற அடிப்படை சரிசெய்தலை முயற்சிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Read More : UPI பரிவர்த்தனை!. நாடு முழுவதும் இன்று முதல் அமலுக்கு வந்த புதிய விதி!. என்னென்ன தெரியுமா?