ஒருவர் உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் வாட்ஸ்-அப் செயலி மூலம் ஒருவரை எளிதில் தொடர்பு கொள்ளலாம் என்பதாலேயே, உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் செயலியாக வாட்ஸ்அப் உள்ளது. வாட்ஸ்அப், பிற செயலிகளைப் போன்று இல்லாமல், இளைஞர்களுக்கு மட்டுமின்றி அனைத்து வயதினரும் பயன்படுத்தும் வகையில் உள்ளது.
உலக அளவில் கோடிக்கணக்கான பயனாளர்களை வைத்திருக்கும் வாட்ஸ்அப் கடந்த 2009-ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இந்நிலையில் அந்த செயலில் பல்வேறு புதிய புதிய அப்டேட்களை கொடுத்து வருகிறது. தகவல் பரிமாற்றத்தில் வாட்ஸ்அப் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. அந்தவகையில் அந்த நிறுவனம் தற்பொழுது இன்னுமொரு புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.
புதிய அப்டேட்கள் எதுவாக இருந்தாலும் முதலில் சோதனை முறையில் கொண்டு வரப்பட்டு, பின்னர் பயனர்களிடையே வரவேற்பு இருந்தால் அதனை நிறுவனம் நடைமுறைக்கு கொண்டு வரும். அந்த வகையில் இ-மெயில் ID மூலமாகவும் Verify செய்வதற்கான அம்சத்தை வாட்ஸ்அப் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
பொதுவாக வாட்ஸப்பில் லாகின் செய்ய் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் பெறக்கூடிய OTP எண்ணை உள்ளிட்டால் போதுமானது. ஆனால் இனிவரும் காலத்தில் இமெயில் ID மூலமாகவும் Verify செய்வதற்கான அம்சத்தை வாட்ஸ்அப் கொண்டு வர உள்ளது. இந்த இமெயில் ஆப்ஷன் தற்பொழுது 2.23.16.15 என்ற வாட்ஸ்அப் வெர்ஷனில் கிடைப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.