fbpx

குரூப் 1, குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள்..!! டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

குரூப்-1, குரூப்-2, 2ஏ தேர்வு முடிவுகள் குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு துறைகளில் உள்ள துணை ஆட்சியர், துணைக் கண்காணிப்பாளர், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர், உதவி ஆணையர் (வணிகவரி), நில நிர்வாகத்தின் துணை தாசில்தார் உள்ளிட்ட பதவிகளை நிரப்ப டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தால் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கான, முதல்நிலைத் தேர்வு நவம்பர் 19ஆம் தேதி மாநிலம் முழுவதும் நடைபெற்றது. குரூப் 2,2A தேர்வுக்கான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் குரூப்-1 மற்றும் குரூப்-2, 2ஏ தேர்வு முடிவுகள் இந்தாண்டு டிசம்பர் மாதம் வெளியாகும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

மேலும், வனத்துறை அதிகாரி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தேர்வு ஆகியவற்றிற்கான கால அட்டவணையையும் டிஎன்பிஎஸ் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

அவன் இருக்கிற வரைக்கும் நமக்கு பிரச்சனைதான்…..! திட்டமிட்டு கள்ளக்காதலனோடு சேர்ந்து கணவனை கொலை செய்து, கிணற்றில் வீசிய இளம்பெண்….!

Thu Aug 17 , 2023
கிருஷ்ணகிரி அருகே, தன்னுடைய கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை தன்னுடைய கள்ளக்காதலனோடு சேர்ந்து, கொலை செய்து, கல்லை கட்டி கிணற்றில் இறக்கிய மனைவியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நமது சேலம் மாவட்டம், ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த மைக்கேல்ராஜ், தன்னுடைய மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் மகாராஜாகடை அருகே வசித்து வந்தார். மேலும், இவர் கல் உடைக்கும் வேலைக்கு சென்று வந்தார் என்றும் கூறப்படுகிறது. அவருடன், தன்னுடைய இளம் மனைவியையும் கல்குவாரிக்கு வேலைக்கு […]

You May Like