fbpx

மலை கிராம மக்களுக்கு சொந்த செலவில் ஆம்புலன்ஸ் வசதி செய்துகொடுத்த நடிகர் பாலா!… நெகிழ்ச்சி தருணம்!

ஈரோடு கடம்பூர் மலைப்பகுதியை சேர்ந்த 18 கிராம மக்களுக்கு மருத்துவ அவசர உதவி காலங்களில் பயன்படும் வகையில், ஆம்புலன்ஸ் சேவையை பிரபல நகைச்சுவை நடிகர் பாலா செய்துகொடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் கடம்பூரை அடுத்த குன்றி உட்பட 18 மலை கிராமத்தில் சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றன. இவர்கள் மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதற்காக, கடம்பூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும், சத்தியமங்கலத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கும் வந்து செல்கின்றனர். குறிப்பாக பாம்புகடி போன்ற நிகழ்வுகளின் போது, பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடியாமல் உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது.

இதன் காரணமாக, குன்றி உட்பட 18 மலை கிராம மக்களின் மருத்துவ அவசர உதவி காலத்தில் பயன்படும் வகையில், 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான இலவச ஆம்புலன்ஸ் வழங்க திட்டமிடப்பட்டது. இதனையடுத்து நகைச்சுவை நடிகர் பாலாவின் சொந்த நிதியின் மூலம் ஆம்புலன்ஸ் வாங்கப்பட்டு, அதன் தொடக்க விழா ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. உணர்வுகள் அறக்கட்டளையின் நிறுவன தலைவர் மக்கள் ராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நகைச்சுவை நடிகர் பாலா கலந்து கொண்டு உரையாற்றினார்.

அதனை தொடர்ந்து, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவஹர் இலவச ஆம்புலன்ஸ் சேவையை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் பாலா, ஆம்புலன்ஸ் சேவையின்றி தவிக்கும் கிராம மக்களுக்காக, புதிய ஆம்புலன்ஸ் வழங்கியது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும், தன்னால் முடிந்த வரை இதுபோன்ற மக்கள் சேவையில் தொடர்ந்து ஈடுபட உள்ளதாகவும் கூறினார். தற்போது தொலைக்காட்சி மற்றும் கலை நிகழ்ச்சிகளில் மட்டுமே பங்கேற்று வருவதாகவும், முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடிக்க, அவர்களின் அழைப்பிற்காக மிகுந்த ஆர்வத்துடன் காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

Kokila

Next Post

அசத்தும் இந்தியா...! 5G மீதான தாக்குதல்களைத் தடுப்பதற்கான மென்பொருள்...!

Fri Aug 18 , 2023
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மென்பொருள் தொழில்நுட்ப தீர்வால் இப்போது 5ஜி கட்டமைப்புகள் பாதிப்பு தாக்குதல்களை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்க முடியும். இதன் மூலம் கட்டமைப்பு செயலிழப்பு நேரத்தைக் குறைக்கலாம். எதிர்காலத்தில் 5 ஜி கட்டமைப்புகள் இன்றியமையாததாக இருக்கும் என்பதால் இது நாடு தழுவிய தகவல் தொடர்பை எளிதாக்க உதவும். தொழில்நுட்பத்தை எளிதாக, சோதிக்க உதவும் பல சமீபத்திய தொழில்நுட்பங்களை ஒருங்கிணைப்பதன் மூலம் 5ஜி தொழில்நுட்பத்தில் தொண்ணூறு சதவீதம் மென்பொருளில் செயல்படுத்தப்பட்டது. ஆனால் […]

You May Like