வளர்ப்பு நாய்கள் யாரையாவது கடித்தால், அதன் உரிமையாளர்களுக்கு அபராதம், சிறை தண்டனை விதிக்கப்படும்’ என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குடகு, விராஜ்பேட்டின், பாரானே கிராமத்தில் வசிக்கும் கர்ப்பிணிக்கு, சமீபத்தில் பிரசவம் நடந்தது. சமுதாய சுகாதார அதிகாரி பவ்யா, தாய் மற்றும் குழந்தையை நலம் விசாரிப்பதற்காக, அந்த கிராமத்துக்கு சென்றார். அவர்களுக்கு மருந்துகளை கொடுத்துவிட்டு திரும்பும் போது, அவர்கள் வீட்டின் வளர்ப்பு நாய், அதிகாரி பவ்யாவை கடித்தது. காயமடைந்த அவர் சிகிச்சை பெறுகிறார். இந்த சம்பவத்தை, தீவிரமாக கருதிய மடிகேரி போலீசார், வளர்ப்பு நாய்கள் யாரையாவது கடித்தால், உரிமையாளர்களை கைது செய்து, அபராதம் விதிப்பதாக எச்சரித்துள்ளனர்.
வீட்டில் நாய் வளர்ப்பவர்கள், கவனமாக இருக்க வேண்டும். வீட்டுக்கு வருவோரை கடித்தால், உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்படும். ஆறு மாதம் சிறை தண்டனை, அபராதம் விதிக்கப்படும். தங்கள் வீட்டின் அருகில், வளர்ப்பு நாய்கள் வைத்திருந்து, யாரையாவது கடித்தால், அப்பகுதியினர் அருகில் உள்ள போலீஸ் நிலையம், அல்லது அவசர உதவி எண் 112ல் தொடர்பு கொண்டு, தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போர் பற்றிய பற்றிய தகவல், ரகசியமாக வைக்கப்படும் என்றும் போலீசார் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.