யோகாவின் முக்கியத்துவம், நன்மைகள் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி கொண்டாடாப்பட்டு வருகிறது.
இந்தியாவில் யோகா, தியானம் உள்ளிட்ட பயிற்சிகள் 5,000 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே உள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கினறனர். உடல் ஆரோக்கியத்திற்கு யோகா பல்வேறு வகையில் உதவும் என்று சொல்லப்படுகிறது. மாறிவரும் வாழ்க்கை சூழலுக்கு ஏற்ப மனநிலை ஆரோக்கியம் உடல்நலனைப் பேண உடற்பயிற்சி மிகவும் அவசியமானதாக ஆகிவிட்டது. பணி சுமை, மனசோர்வு உள்ளிட்டவற்றை நிர்வகிக்க யோகா உதவும் என்பது மருத்து நிபுணர்களின் பரிந்துரையாக உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 27, 2014 அன்று ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் தனது உரையின் போது சர்வதேச யோகா தினம் பற்றிய திட்டங்களை முதன்முதலில் முன்வைத்தார். அதை ஏற்றுக்கொண்ட் ஐ.நா. சபை, 2014ம்ஆண்டு டிசம்பர் 11-ல் ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோக தினத்தை அறிவித்தது. 2015ஆம் ஆண்டிலிருந்து, சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தாண்டிற்கான கருப்பொருள் “ஒரு பூமி மற்றும் ஒரு ஆரோக்கியத்திற்கு யோகா” (Yoga for One Earth, One Health) ஆகும்.இந்திய அரசு, ஆயுஷ் அமைச்சகத்துடன் இணைந்து, 2025 ஆம் ஆண்டின் கருப்பொருளை தேர்வு செய்துள்ளது. இந்த கருப்பொருள் மனித நல்வாழ்வுக்கும், நாம் வாழும் இந்த பூமியின் ஆரோக்கியத்திற்கும் இடையிலான தொடர்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
யோகா தினத்தின் முக்கியத்துவம்:
யோகா ஒருவரின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு நம்பமுடியாத அளவிற்கு நன்மையை தருகிறது நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். உடல் மற்றும் மனதின் சரியான செயல்பாட்டை தொடர்ச்சியாக யோகா செய்வதால் உறுதி செய்யலாம்.
யோகா தசைகளை வலுப்படுத்துகிறது மற்றும் உடலின் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துகிறது. உணர்வுகளை நிர்வகிக்க உதவுகிறது. ஆயுர்வேத மருத்துவர் சைதாலி தேஷ்முக் யோகாவின் நன்மைகள் குறித்து தெரிவிப்பவைகளை காணலாம்.
உடலின் சமநிலையை மேம்படுத்த உதவும்: யோகா தசைகளின் செயல்பாட்டில் கவனம் செலுத்துக்கிறது. இது உங்கள் உடலின் நெகிழ்வுத்தன்மைக்கு உதவும். மூட்டுகள் வலிமையாக இருக்கும். தசைகளின் வலிமையை உறுதி செய்கிறது.
சுவாச செயல்பாட்டை மேம்படுத்துகிறது: பிராணயாமா, அல்லது யோகா சுவாசப் பயிற்சிகள், ஆழ்ந்த, கட்டுப்படுத்தப்பட்ட சுவாச முறைகளில் கவனம் செலுத்த உதவும். யோகா செய்வது நுரையீரல் திறனை மேம்படுத்துகிறது. சுவாச மண்டலத்தில் உள்ள தசைகளை வலிமைப்படுத்துகிறது. உடலுக்கு ஆக்ஸிஜன் செல்வதை அதிகரிக்கிறது.
இதய ஆரோக்கியம் மேம்படும்: தொடர்ச்சியாக யோகா செய்வது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதயத்திற்கு செல்லும் தசைகளின் வலிமையை அதிகரிக்கும்.
மூட்டு ஆரோக்கியம் மேம்படும்: யோகா செய்வது மூட்டுகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஆர்திரிடிஸ், மூட்டு தொடர்பான பிரச்சனைகள் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் யோகா செய்யலாம்.
செரிமானத்திற்கு உதவும்: யோகா செரிமான மண்டலத்தை மேம்படுத்தும். வயற்றுப் பகுதிகளில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். இரைப்பை, குடல் செயல்பாட்டை மேம்படுத்தலாம். இது மலச்சிக்கல் மற்றும் அஜீரணம் போன்ற செரிமான பிரச்சனைகளை போக்க உதவும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது: தினமும் அல்லது வாரத்திற்கு 4-5 முறை யோகா பயிற்சி செய்வது மன அழுத்தத்தை குறைக்க உதவும். இது நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்தவும் யோகா உதவும். வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவும்.
எடையை நிர்வகிக்க உதவும்: உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதன் மூலம் உடல் எடையை சீராக நிர்வகிக்கலாம். இதற்கு உணவுப் பழக்கவும் சீராக இருக்க வேண்டும். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை சாப்பிட வேண்டும். எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகள்,பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகள் ஆகியவற்றை சாப்பிட கூடாது.
கவனத்துடன் ஒரு விசயத்தில் ஈடுபட உதவும்: யோகாவின் தியான அம்சங்கள், நினைவாற்றல் மற்றும் செறிவு நுட்பங்கள் போன்றவை மேம்படுத்தலாம். மனத் தெளிவு, கவனம் செலுத்தும் ஆற்றல் ஆகியவற்றை மேம்படுத்தும். தொடர்ந்து யோகா பயிற்சி செய்து வந்தால், மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வைக் குறைக்கும். ஒட்டுமொத்த மன நலனை மேம்படுத்தும். இதனால் நிகழ்காலத்தில் கவனத்துடன் இருக்க முடியும்.
தூக்கமின்மையை குணப்படுத்தும்: யோகா நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தும். கார்டிசோல் போன்ற மன அழுத்த (cortisol) ஹார்மோன்களின் சுரப்பை சீராக வைக்கும். இதனால் உடலிலுள்ள நரம்புகள் அமைதியாக இருக்கும். உங்களுக்கு தூக்கமும் நன்றாக வரும்.
யோகா நேர்மறையான கண்ணோட்டத்தை அதிகரிக்கும். உங்களுக்கும் உடலுக்கும் உள்ள தொடர்பை கண்டறிய நீடிக்க உதவும். மன, உடல் நலன் மேம்பட யோகா செய்வது உதவும்.மன அழுத்தத்தை குறைக்கிறது. உணர்வு சமநிலையை ஊக்குவிக்கிறது. பரபரப்பான வாழ்க்கை முறைகளில் இருந்து வெளியேறி அமைதியான வாழ்வை மேம்படுத்த உதவும்.
Readmore: ரூ.50,000 + விருது…! தமிழக அறிவியலறிஞர் விருதுக்கு ஆகஸ்ட் 4-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…!