இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அதிரடியாக விளையாடிய இந்திய அணி விக்கெட் கீப்பர் ரிஷப் பந்து தோனியின் இரண்டு சாதனையை முறியடித்து சாதனை படைத்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிராக கடந்த 20ம் தேதி தொடங்கிய டெஸ்ட் தொடர், ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிலையில், நேற்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸ் நகரின் ஹெடிங்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி 5 நாட்கள் ஜூன் 24ஆம் தேதி வரை நடைபெறும். இது 2025-2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணியின் முதல் போட்டி ஆகும்.
ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஓய்வுக்கு பின் நடக்கும் முதல் டெஸ்ட் தொடர் என்பதால், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது. புதிய கேப்டனாக சுப்மன் கில்லும் துணை கேப்டனாக ரிஷப் பண்ட்டும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைதொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன ஜெய்ஸ்வால் – கே.எல்.ராகுல் ஜோடி களமிறங்கினர். ஆட்டத்தின் இறுதியில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 359 ரன்கள் எடுத்தது.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் பண்ட், 65 ரன்கள் உடன் களத்தில் இருந்தார். இதில் ஆறு பவுண்டரி,இரண்டு சிக்ஸர்கள் அடங்கும்.இந்த இன்னிங்ஸ் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் ,3000 ரன்களை சேர்த்திருக்கிறார். இங்கிலாந்து மண்ணில் முதல் நாளில் இந்திய அணி 350 ரன்னுக்கு மேல் எடுப்பது இதுவே முதல் முறையாகும். இந்த நிலையில் இன்று 2-வது நாள் ஆட்டம் இந்திய மாலை 3.30 மணிக்கு நடைபெறுகிறது.மேலும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 3000 ரன்கள் எட்டிய இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பண்ட் படைத்திருக்கிறார்.
இதன் மூலம் தோனியின் ரெக்கார்டை அவர் முறியடித்திருக்கிறார்.அது மட்டும் இல்லாமல் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் அதிக ரன்கள் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற தோனியின் சாதனையும் பண்ட் முறியடித்திருக்கிறார். தோனி 1731 ரன்கள் அடித்த நிலையில் ரிஷப் பண்ட் தற்போது 1734 ரன்கள் அடித்துள்ளார்.
Readmore: இந்த நாடுகள்தான் 3-ம் உலகப் போரைத் தொடங்கும்!. நோஸ்ட்ராடாமஸின் அச்சுறுத்தும் கணிப்பு!