வால்பாறையில் சிறுத்தை இழுத்து சென்ற சிறுமியின் உடல் 18 மணி நேரத்திற்கு சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள தேயிலை எஸ்டேட்களில் தமிழ்நாடு மட்டுமின்றி ஜார்கண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அந்த வகையில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஒரு தம்பதி வால்பாறையில் உள்ள பச்சைமலை எஸ்டேட்டில் தங்கி தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தம்பதிக்கு 6 வயதில் ரோஷினி என்ற மகள் உள்ளார்.
இந்த நிலையில் நேற்று மாலை சிறுமி ரோஷினி வீட்டருக்கு உள்ள காளியம்மன் கோயில் முன்பு விளையாடிக் கொண்டிருந்தார். சிறுமியின் தாய் தண்ணீர் பிடித்து கொண்டிருந்தார். அப்போது புதரில் மறைந்திருந்த சிறுத்தை ஒன்று ஒன்று திடீரென வெளியே வந்து ரோஷினி மீது பாய்ந்து கழுத்தை கவ்வியது. இதை பார்த்து சிறுமியின் தாய் அலறிய நிலையில், ஆனால் அதற்குள் சிறுத்தை சிறுமியை கவ்வியபடி இழுத்துக் கொண்டு புதருக்குள் ஓடி மறைந்தது.
அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் தகவலறிந்து அங்கு வந்த வனத்துறையினர், காவல்துறையினர் சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டனர். எனினும் இன்று காலை வரை சிறுமி கிடைக்கவில்லை. பின்னர் 2 மோப்பநாய் உதவியுடன் வனத்துறையினரும், காவல்துறையினரும் தீவிர தேடுதல் பணி நடந்தது. கிட்டத்தட்ட 18 மணி நேரத்திற்கு பிறகு, தற்போது சிறுமியின் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. அடர்ந்த படுகாயங்களுடன் கிடந்த சிறுமியின் உடலை மீட்ட வனத்துறையினர் மீட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது..
Read More : மறுகூட்டல் & மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்த மாணவர்களே..! 23-ம் தேதி வெளியாகும் பட்டியல்…!