அஜர்பைஜானின் பாகுவில், கடந்த ஜூலை 30ஆம் தேதில் முதல் செஸ் உலகக் கோப்பை 2023,வெகு விமர்சையாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 206 வீரர்கள் பங்குபெற, ஒற்றை-எலிமினேஷன் விளையாட்டு முறையில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 வயது கிராண்ட்மாஸ்டர் (ஜிஎம்), ஆர். பிரக்ஞானந்தா பங்குபெற்று இறுதி போட்டிக்கு முன்னேறினார். இறுதிப்போட்டியில் உலக நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனுடன் பிரக்ஞானந்தா மோதி வருகிறார்.
உலகக் கோப்பை செஸ் இறுதிப்போட்டியின் முதல் சுற்று 35வது நகர்த்தலுக்குப் பிறகு டிராவில் முடிந்தது. கார்ல்சன் பிரக்ஞானந்தா மோதிய இறுதிப் போட்டியின் முதல் சுற்று டிராவில் முடிந்தது. முதல் சுற்று டிராவில் முடிந்த நிலையில் நாளை இரண்டாம் சுற்று போட்டி நடைபெறுகிறது. இரண்டாவது சுற்றும் டிராவில் முடிந்தால் டைபிரேக்கர் முறையில் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார். இன்று வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 2வது சுற்றில் கருப்பு நிற காய்களுடன் விளையாடுவார். பிரக்ஞானந்தா ஏற்கனவே உலக 2ஆம் நம்பர் வீரர் ஃபேபியானோ மற்றும் 3வது இடத்தில் இருக்கும் ஹிகாருவை வென்றுள்ள நிலையில் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி சாதிப்பார்என்பதே தமிழகம் அல்லாது இந்திய மக்களின் வேண்டுதல் ஆகும்.