நடிகர் ஸ்ரீகாந்தை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை திட்டம்.. வேறு யாருக்கெல்லாம் தொடர்பு ?

image 80 1

போதை பொருள் வழக்கில், நடிகர் ஸ்ரீ காந்தை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள தனியார் பாரில் நடந்த அடிதடி வழக்கில் அதிமுக நிர்வாகி பிரதீப் குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரின் செல்போனை ஆய்வு செய்ததில் தீங்கிரை என்ற படத்தின் மூலம் நடிகர் ஸ்ரீ காந்த் உடன் பழக்கம் ஏற்பட்டதும், அதன் மூலம் பிரதீப் குமாரிடம் இருந்து ஸ்ரீ காந்த் கொகைன் போதை பொருள் வாங்கியதும் தெரியவந்தது.


இதையடுத்து ஸ்ரீ காந்திடம் நடத்தபப்ட்ட ரத்த மாதிரி பரிசோதனையில் அவர் போதை பொருள் பயன்படுத்தியது உறுதியானது. இதை தொடர்ந்து ஸ்ரீ காந்த் நேற்று கைது செய்யப்பட்டார். போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் ஸ்ரீ காந்த் 3வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். கானா நாட்டை சேர்ந்த ஜான் என்பவர் 2வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

நடிகர் ஸ்ரீ காந்த் ஒரு கிராம் ரூ.12,000 என்ற விலையில் மொத்தம் ரூ.4 லட்சம் வரை பணப்பரிமாற்றம் நடைபெற்றதாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ஸ்ரீ காந்த் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு 7-ம் தேதி வரை நீதிமன்றம் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அவரை காவலில் இருந்து எடுத்து மீண்டும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் ஒன்றரை வருடங்களாக கொகைன் போதைப் பொருள் பயன்படுத்தியதாக விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது. கேளிக்கை விடுதிகளில் நடக்கும் பார்ட்டிகளில் ஸ்ரீ காந்த் போதை பொருளை பயன்படுத்தியதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஸ்ரீ காந்தின் நட்பு வட்டாரங்களில் உள்ள பிரபலங்கள் யாரேனும் இந்த போதை பொருளை பயன்படுத்தினார்களா? என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை செய்ய உள்ளனர். திரைத்துறையில் பல பிரபலங்களும் போதை பொருள் பயன்படுத்தி இருக்க வாய்ப்புள்ளது என்பதால் மேலும் பல பிரபலங்கள் இதில் சிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. அதே போல் நடிகர் கிருஷ்ணாவுக்கும் இதில் தொடர்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அவரிடமும் விசாரணை நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலை நடிகர் ஸ்ரீ காந்தை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத்திடம் இருந்து ஸ்ரீ காந்த் 250 கிராம் கொக்கைன் வாங்கியதாக தகவல் வெளியாக உள்ளது. சமீபத்தில் துபாயிலிருந்து திரும்பிய ஸ்ரீகாந்த், சனிக்கிழமை தனது வீட்டில் பார்ட்டி நடத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

போதை பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் ஸ்ரீ காந்துடன் வேறு நடிகர்களுக்கு தொடர்பா என்று விசாரிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். மேலும் ஸ்ரீ காந்த் யார் மூலம் போதைப் பொருள் வாங்கி உள்ளார் என்பது குறித்தும் விசாரிகப்பட உள்ளது.

RUPA

Next Post

பேரழிவை ஏற்படுத்தும் மிகப்பெரிய போர்.. பாபா வங்காவின் கணிப்பு அப்படியே உண்மையாகிறதா?

Tue Jun 24 , 2025
இஸ்ரேல் மற்றும் ஈரான் மோதலுக்கு மத்தியில் பாபா வாங்காவின் 2025 ஆம் ஆண்டுக்கான திகிலூட்டும் கணிப்புகள் வெளியாகி உள்ளது. பிரபல தீர்க்கதரிசி பாபா வாங்கா தனது எதிர்கால கணிப்புகள் மூலம் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறார். அவரின் கணிப்புகளில் பெரும்பாலானவை பலித்ததாக கூறப்படுகிறது. பல்கேரியாவில் வாழ்ந்து வந்த பாபா வங்கா, கண் பார்வையற்றவர். சிறு வயதில் அவர் கண் பார்வையை இழந்த போது அவருக்கு எதிர்காலத்தை கணிக்கும் சக்தி அவருக்கு […]
Gemini Generated Image ite4tjite4tjite4

You May Like