நடிகரும் தவெக தலைவருமான விஜய் கடந்த 22-ம் தேதி தனது 51வது பிறந்தநாளை கொண்டாடினார். ரசிகர்கள், நடிகர்கள், தமிழகத்தின் முன்னணி அரசியல் தலைவர்கள் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தனர்.. அந்த வகையில் சக நடிகையும், விஜய்யின் தோழியுமான த்ரிஷா கிருஷ்ணன் விஜய் உடன் இருக்கும் க்யூட்டான அன்சீன் போட்டோவை பகிர்ந்து பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தார்.
அந்த போட்டோவில், த்ரிஷாவின் வளர்ப்பு நாயான இஸியை, விஜய் தூக்கிப் பிடித்துள்ளார்.. விஜய்யை பார்த்து த்ரிஷா ரசித்து சிரிக்கிறார்.. மேலும் “மிகவும் சிறந்த நபருக்கு.. பிறந்தநாள் வாழ்த்துக்கள் ” என்று த்ரிஷா பதிவிட்டிருந்தார்.
இந்த போட்டோ வைரலான நிலையில் விஜய் – த்ரிஷா டேட்டிங் வதந்தி மீண்டும் பரவியது. கடந்த ஆண்டு விஜய் பிறந்தநாள் கொண்டாடிய போது, த்ரிஷா விஜய் உடன் செல்ஃபியை பகிர்ந்திருந்தார். அப்போது இருவரும் ஒரே வீட்டில் இருப்பதாக தகவல்கள் பரவியது. இந்த நிலையில் இந்த ஆண்டு பிறந்தநாளின் போது விஜய் உடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்துள்ளதால் இருவரும் தங்கள் காதலை அதிகாரப்பூர்வமாக சொல்கிறார்களா? என்று பலரும் பதிவிட்டு வந்தனர். மேலும் விஜய் – த்ரிஷா இருவரும் டேட்டிங்கில் இருப்பதாகவும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
பிரபல நடிகை த்ரிஷா கிருஷ்ணன் சமூக ஊடகங்களில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். தனது இன்ஸ்டா கதையில் பதிவிட்டுள்ள அவர் “ நீங்கள் அன்பால் நிறைந்திருக்கும்போது, அது அசிங்கம் நிறைந்த மக்களை குழப்புகிறது…” என்று குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு விமர்சனங்களுக்கு கொடுக்கும் பதிலாகவே பார்க்கப்படுகிறது.

.
தமிழ் சினிமாவின் ஃபேவரைட் ஜோடிகளில் விஜய் – த்ரிஷா ஜோடியும் ஒன்று.. கில்லி (2004), திருப்பாச்சி (2005), ஆதி (2006), குருவி (2008) போன்ற பல படங்களில் இந்த ஜோடியின் கெமிஸ்ட்ரி ரசிகர்களை கவர்ந்தது. எனினும் 2008 க்குப் பிறகு, இந்த ஜோடி திரையில் மீண்டும் ஜோடி சேரவில்லை.. ஆனால் கில்லி படத்தில் இருந்தே விஜய்யும் த்ரிஷாவும் காதலிப்பதாக வதந்திகள் பரவியது. குருவி படத்திற்கு பின்னர் த்ரிஷாவுடன் சேர்ந்து நடிக்கக் கூடாது என்று விஜய்யின் மனைவி சங்கீதா வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் இருவரும் நண்பர்கள் மட்டுமே என்று கூறினர். எனினும் 15 ஆண்டுகளுக்குப் பிறகு, 2023 இல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ படத்தில் விஜய் – த்ரிஷா ஜோடி இணைந்தது. ரசிகர்கள் இந்த ஜோடியை கொண்டாடி தீர்த்தனர். 1999-ம் ஆண்டு விஜய், சங்கீதாவை திருமணம் செய்தார். இந்த ஜோடிக்கு ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா சாஷா என்ற 2 பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : அஜித்துக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி ஆயிட்டாரு? வைரலாகும் புதிய லுக்.. ஷாக்கான ரசிகர்கள்..