விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. இந்நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியானது 6 சீசன்களை வெற்றிகரமாக கடந்துவிட்ட நிலையில், தற்போது 7-வது சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. இதுகுறித்த ப்ரோமோ வீடியோவும் சமீபத்தில் வெளியானது.
இம்முறை யார் யார் போட்டியாளர்களாக வரப்போகிறார்கள் என்பதைக் காணப் பலரும் ஆவலுடன் உள்ளனர். இந்நிலையில், தற்போது ரசிகர்களுக்கு சூப்பரான நியூஸ் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதாவது பிக்பாஸ் வீட்டிற்குள் முதலாவது போட்டியாளராக செய்தி வாசிப்பாளர் ரஞ்சித் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி முதல் போட்டியாளர் ரஞ்சித் இல்லையாம்.
அதாவது, நடிகர் அப்பாஸ் தான் முதலாவது போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருக்கிறாராம். இதனால் தான் தற்போது அப்பாஸ் வெளிநாட்டில் இருந்து வந்து இந்தியாவில் தங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலும் சிறப்பு விருந்தினராக இவர் கலந்து கொண்டார்.