நோ டவுன் பேமென்ட், V, மிஸ்ஸிங் இன் ஆக்ஷன் III ஆகிய படங்களில் சினிமா ரசிகர்களை மகிழ்வித்த நடிகர், பாடலாசிரியர், தயாரிப்பாளராக செயல்பட்ட பாலிவுட் பிரபலம் அகி அலியோங் வயது 90-ல் காலமானார். டிமென்ஷியா என்னும் நியாமக மறதி நோயால் பாதிக்கப்பட்ட அவர், ஜூன் 23ஆம் தேதி திங்கட்கிழமை, கலிபோர்னியாவின் சில்மரில் உள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்தார். இந்த தகவலை அவரது 38 வயதான மனைவி கான்சிட்டா, உறுதிப்படுத்தினார்.
சிறுபான்மையினருக்காக வாழ்ந்த கலைஞர்: டிரினிடாட் பூர்வீகமான அகி அலியோங், தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை சிறுபான்மையினருக்கான உரிமைகளைப் பேண செலவிட்டவர். ஹாலிவுட்டில் பல ஆண்டுகளாக பல்வேறு திரைப்படங்களிலும், குறிப்பாக தற்காப்புக் கலை அடங்கிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
அவர் 1957-ம் ஆண்டு ‘நோ டவுன் பேமென்ட்’ திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். இதில், கலிபோர்னியா புறநகரில் குடியிருக்கும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஊழியராக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, 1984-85ம் ஆண்டில் NBCவில் ஒளிபரப்பான ‘V’ என்ற அறிவியல் புனைகதை தொடரில், Mr. Chou எனும் கதாபாத்திரத்தில் நடித்தார். மேலும், 1988-ல் சக் நோரிஸுடன் நடித்த ‘பிராடாக்: மிஸ்ஸிங் இன் ஆக்ஷன் III’ திரைப்படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் பெரும் கவனம் பெற்றார். இவரது மறைவுக்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Read more: ராமன் நூடுல்ஸில் புற்றுநோய் எச்சரிக்கை லேபிள்.. இணையத்தை உலுக்கும் அதிர்ச்சி வீடியோ..!!