fbpx

விவசாயிகளுக்கு குட்நியூஸ்!… பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் இனி ரூ.8000!… மத்திய அரசு முடிவு!

பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் நிதியுதவி ஆறாயிரத்தில் இருந்து ரூ.8000ஆக உயர்த்தி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அரசு அறிவித்துள்ள பல்வேறு நலத்திட்டங்களால் மக்கள் பெரிதும் பயனடைந்துவருகின்றனர். அந்தவகையில், மக்கள் நலன் கருதி மேலும் பல நலத்திட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது. இந்தநிலையில், நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது.

இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 8000 ரூபாய் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் நலிவடைந்த விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் பணத்தை மூன்று தவணையாக வழங்கி வந்த நிலையில் இன்னும் 2000 ரூபாய் அதிகரித்து இனி நான்கு தவணையாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான பரிந்துரை பிரதமர் அலுவலகத்தில் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Kokila

Next Post

அடேங்கப்பா!… இனி ஏடிஎம்மிலேயே எல்லாம் செய்யலாம்!… இத்தனை வசதிகள் இருக்கா?… அறிந்துகொள்ளுங்கள்!

Sun Aug 27 , 2023
இன்றைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ள நிலையில் அவர்கள் தங்களுக்கு தேவையான பணத்தை எளிதில் ஏடிஎம் கார்டு மூலமாக எடுத்துச் செல்கின்றனர். ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுப்பது மட்டுமல்லாமல் நிதி அல்லாத பரிவர்த்தனைகளையும் செய்ய முடியும். அதாவது நம்முடைய வங்கி கணக்கில் எவ்வளவு பேலன்ஸ் உள்ளது என்பதையும் தெரிந்து கொள்ளலாம். அந்தவகையில் ஏடிஎம் மூலம் மேலும் என்னவெல்லாம் செய்யலாம் என்பது குறித்து தெரிந்துகொள்வோம். ஏடிஎம் இயந்திரத்தின் அடிப்படை வேலை […]

You May Like