தமிழ் சின்னத்திரையில் ரீல் ஜோடிகளாக சீரியலில் நடித்து வருபவர்கள், தற்போது ரியல் ஜோடிகளாக மாறி வருகின்றனர். சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்களின் காதல் திருமணம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்தவகையில், சின்னத்திரையில் தற்போது வேறு வேறு சேனலை சேர்ந்த பிரபலங்கள் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பான சிவா மனசுல சக்தி என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் ஜனனி பிரதீப். அதேபோல் யூடியூப் மூலம் பிரபலமான இனியன், தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வித்யா நம்பர் ஒன் சீரியலில் நடித்துள்ளார். இவர்கள் இருவரும் தான் தற்போது காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இரண்டு குடும்பத்தார் முன்னிலையில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்த நிலையில், திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதையடுத்து அவர்களது ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் என பலரும் இவர்களது திருமணத்திற்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.